Merku Thodarchi Malai |
---|
மேற்குத் தொடர்ச்சி மலை இளைச்சுப் போகும் அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும்
மாசம் ஒருவாட்டி நான் வடுகபட்டி போகாட்டி வலது கைநீட்டி நான் மலையோட பேசாட்டி
மேற்குத் தொடர்ச்சி மலை இளைச்சுப் போகும் அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும்
வைகை நதிமேல என் வலதுகை நனைக்காம வைகையில வெளையாடும் வாளமீனு தூங்காது
பூமரத்துக் கீழே நான் புதுப்பாட்டு எழுதாம பூமரத்தில் கூடுகட்டும் புறா இரை கொள்ளாது
கத்தாழங் காடு எங்கால்சூடு காங்காமக் கத்தாழம் புதரோட காடைமுட்டை போடாது
மஞ்சளாறு அணையில் நான் மலைக்காத்து வாங்காம மஞ்சளாத்து மூலையில மணிக்குருவி மேயாது
மலையைக் கொஞ்சம் கடிச்சுக் கிட்டே கூழ்குடிச்ச பூமியடா மண்ணும் மழையும் எங்க பரம்பரைக்கே சாமியடா
மேற்குத் தொடர்ச்சி மலை இளைச்சுப் போகும் அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும்
கும்பக்கரைச் சாலையில கோமிய வாசம் புடிக்காம மண்டக்குள்ள மல்லுக்கட்டி மல்லியப்பூ பூக்காது
கெடையாட்டு மந்தையில கெடாக் கூத்துக் காங்காம காஞ்சுபோன பொழப்புக்குள்ள கற்பனையே கெளம்பாது
சாதிசனம் பேசும் மொழி சங்கீதம் கேளாம இதிகாச எழுத்துக்கு சகவாசம் இருக்காது
சுட்ட மீன் கவுச்சி வந்து சுர்ருன்னு ஏறாம எண்சீர் விருத்தத்தில் ஏழாஞ்சீரு வாராது
மலையைக் கொஞ்சம் கடிச்சுக்கிட்டே கூழ்குடிச்ச பூமியடா மண்ணும் மழையும் எங்க பரம்பரைக்கே சாமியடா