Mogana Pon Chithiram |
---|
பாடலாசிரியர் : மாதுரி பச்சையப்பன்
மோகன பொன் சித்திரம்தான் நானடி என்னோடு மோதி நடனமாடுவது யாரடி யாரடி
மோகன பொன் சித்திரம்தான் நானடி என்னோடு மோதி நடனமாடுவது யாரடி யாரடி
ஆடி வரும் பொன் விளக்கு நானடி என்னோடு ஆட்டத்திலே போட்டியிட்டு பாரடி பாரடி
நாட்டைக்குறிச்சி பாடி நானாடுவேன் நாட்டியம் நளின கலை போட்டியிலே நான் வெல்லுவேன் நிச்சயம்
எட்டுத் திசைகளிலும் என் சதங்கை ஒலி கேட்கும் வெட்டும் விழி அசைப்பில் விண்ணகமே அசைந்தாடும்
கொட்டி முழக்குகிறாய் கீர்த்தியெல்லாம் பேசுகிறாய் இட்ட அடி இதற்கு எதிராக ஆடடி
சொல்லுக்கு சொல் ஏனடி புருவ வில்லுக்கு பதில் சொல்லடி நான் இல்லாத இடையாட இரு தங்க குடமாட நில்லாமல் சுழன்றாடுவேன் மாதர் நெஞ்செல்லாம் குழைந்தாடுவேன்
காதிரெண்டில் குழையாட கையிரெண்டில் வளையாட காலிரெண்டில் சிலம்பாட கண்ணிரெண்டில் ஒளியாட காரிகை நான் சதிராடுவேன் பரதக் கலையினிலே முடி சூடுவேன்
பரதக்கலை பழையக் கதை தானடி – அதில் பார்ப்பதற்கு பகட்டெல்லாம் ஏதடி ஏதடி பண்பை வளர்ப்பதுதான் களைகளடி அதில் பகட்டுகள் நுழைவதென்றால் குறைகளடி குறைகளடி
அலுக்கி குலுக்கி தளுக்கி மினுக்கியே ஆடாமல் ஆடுவது நாட்டியமா
அனுபவம் உனக்கு வந்திடுமா என் அனுபவம் உனக்கு வந்திடுமா
கொடிக்கு நெளிவை கொடுத்தவன் யாரடி உடுக்கை கண்டு நான் அஞ்சுவேனா தோல்வியைக் கண்டு நான் கேஞ்சுவேனா நான் ஜெயத்திலே மிதக்கும் மாலினி நான் ஜெயத்தில் பிறந்த சித்ரா
வித்தையைக் காட்டடி பார்க்கலாம் என் வேகத்தில் ஆடடி பார்க்கலாம்