Mugathai Paarthathillai

Mugathai Paarthathillai Song Lyrics In English


முகத்தைப் பார்த்ததில்லை
அன்பு மொழியைக் கேட்டதில்லை
இந்த மனதைக் கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

முகத்தைப் பார்த்ததில்லை
அன்பு மொழியைக் கேட்டதில்லை
இந்த மனதைக் கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

சுகத்தைப் பார்த்ததில்லை
பிறர் சொல்லால் கேட்டதில்லை
இதழ் சுவையை அறிந்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

சுகத்தைப் பார்த்ததில்லை
பிறர் சொல்லால் கேட்டதில்லை
இதழ் சுவையை அறிந்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

பாதி இரவில் தூக்கம் விழிக்கும்
பாவம் அனல் போல் மேனி கொதிக்கும்

அருகிலிருக்கும் துணையை எழுப்பும்
உறங்கும் தலைவன் உடலைத் திருப்பும்

முகத்தைப்
பார்த்ததில்லை
அன்பு மொழியைக்
கேட்டதில்லை
இந்த மனதைக்
கொடுத்ததில்லை
இதில் மயக்கம்
வந்ததென்ன


திறந்து கிடக்கும் கதவை அடைக்கும்
எரியும் விளக்கின் திரியைக் குறைக்கும்

மெல்ல நெருங்கும் சொல்லத் தொடங்கும்
முதலில் தயங்கும் முடிவில் மயங்கும்

சுகத்தைப்
பார்த்ததில்லை
பிறர் சொல்லால்
கேட்டதில்லை
இதழ் சுவையை
அறிந்ததில்லை
இதில் மயக்கம்
வந்ததென்ன

மயக்கம் கலையும் மௌனம் நிலவும்
குளிர்ந்த மேனி காற்றில் உலரும்

களைப்பும் தோன்றும் கண்கள் மூடும்
காலை விடிந்தால் நீரில் ஆடும்

இருவர் : முகத்தைப் பார்த்ததில்லை
அன்பு மொழியைக் கேட்டதில்லை
இந்த மனதைக் கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன