Naalu Vagai Poovil Malarkottai |
---|
பாடகர்கள் : எஸ் ஜானகி மற்றும் பி ஜெயச்சந்திரன்
பாடல் ஆசிரியர் : எம் ஜி வல்லபன்
நாலு வகை பூவில் மலர்க்கோட்டை அதில் ராணி ஆகிறாய் நாலு புறம் வீசும் மலர் வாசம் அதில் நீயே ஆள்கிறாய்
என் ராசய்யாஆஆஆ என் ராசய்யா இந்த ராணி தேடும் தேவன் நீயே மாலை தரும் ராஜன் மகராஜன் முகம் கண்டால் போதுமே
ஆளான சின்னப் பெண்ணே வருவாயோ அத்தானின் எண்ணம் என்ன அறிவாயோ பூவோடு சொந்தம் கொண்ட பந்தம் தேட வாராயோ
நீ பாடி வா கண்ணில் ராகம் சேர்த்து நான் ஆடவா அந்தக் கோலம் பார்த்து
என் கோவில் தீபமே கன்னம் என்ன மின்னும் பொன்னா
ஹோ நாலு வகை பூவில் மலர்க்கோட்டை அதில் ராஜன் ஆகிறாய் நாலு புறம் வீசும் மலர் வாசம் அதில் நீயே ஆள்கிறாய்
ஹேராமாயிஆஆஆ இந்த ராஜன் தேடும் தேவி நீயே மாலை பெறும் ராணி மகராணி முகம் கண்டால் போதுமே
ஈரேழு ஆண்டும் உந்தன் நினைவோடு ஏதேதோ கண்ணில் கண்டேன் கனவோடு ஏழேழு ஜென்மம் நெஞ்சில் உன்னை காண வாழ்ந்தேனே
நீ ஆடி வா கன்னி தேரில் ஏறி நான் ஆடவா உன்னை தோளில் தாங்கி உன் தோளில் சங்கமம் எந்தன் கண்ணில் மின்னும் கண்ணா
நாலு வகை பூவில் மலர்க்கோட்டை அதில் ராணி ஆகிறாய் நாலு புறம் வீசும் மலர் வாசம் அதில் நீயே ஆள்கிறாய்