Naan Kandadhu

Naan Kandadhu Song Lyrics In English


நான்கண்டது ஆஅஆ பொய் நாடகம் ஆஅஆ வாலிபம் வானிலே வானவில் போலவே என் காதல் இன்று பொய்யானதே

நான்கண்டது ஆஅஆ பொய் நாடகம் ஆஅஆ

பனி நீரிலே பெண் பயிரானவள் பல காலமாய் என் உயிரானவள் மனம் மாறினேன் அவள் எனை மீறினாள் மலர் மாலையை இன்று யார் சூடினார்

ஏன் ஏன் இளமையும் தீயானது ஏன் ஏன் கனவுகள் வீணானது ஏன் ஏன் இளமையும் தீயானது ஏன் ஏன் கனவுகள் வீணானது விடியல் இடையில் இரவானது

நான்கண்டது ஆஅஆ பொய் நாடகம் ஆஅஆ


ஏன் தெய்வமே இந்த விளையாட்டுதான் என் பாவமோ நெஞ்சை பழுதாக்கினாள் நான் காணவே அன்று நிலவாகினாள் ஏனின்று காரிருள் ஆகினாள்

ஓ ஒபுழுதியில் பூமாலைதான் நான் நான் நடந்திடும் மண் பொம்மைதான் ஓ ஒபுழுதியில் பூமாலைதான் நான் நான் நடந்திடும் மண் பொம்மைதான் நழுவும் உலகம் புரிகின்றது

நான்கண்டது ஆஅஆ பொய் நாடகம் ஆஅஆ

வாலிபம் வானிலே வானவில் போலவே என் காதல் இன்று பொய்யானதே