Naan Vantha Pathai |
---|
இசை அமைப்பாளர் : ஆர் சுதர்சனம்
பாடல் ஆசிரியர் : வாலி
நான் வந்த பாதை மான் வந்தது தேன் தந்த போதை ஏன் தந்தது கண் என்ற வாசல் கதவை திறந்து பெண் என்ற தெய்வம் முன் நின்றது

கவி ஒன்று சொல்ல பொருள் தேடுகின்றேன் ஒரு வார்த்தை உருவாக தடுமாறுகின்றேன்
கவி ஒன்று சொல்ல பொருள் தேடுகின்றேன் ஒரு வார்த்தை உருவாக தடுமாறுகின்றேன் நீரோடை வந்து பாயாத நிலமாம் நீரோடை வந்து பாயாத நிலமாம் நிழல் மேகம் ஒரு போதும் தழுவாத நிலவாம்
நான் வந்த பாதை மான் வந்தது தேன் தந்த போதை ஏன் தந்தது கண் என்ற வாசல் கதவை திறந்து பெண் என்ற தெய்வம் முன் நின்றது
இடை என்ற கொடியின் நடை காணவேண்டும் இதழோரம் இந்நேரம் பனி பெய்ய வேண்டும்
இடை என்ற கொடியின் நடை காணவேண்டும் இதழோரம் இந்நேரம் பனி பெய்ய வேண்டும் இரவென்ற பள்ளி வாவென்று சொல்லி இரவென்ற பள்ளி வாவென்று சொல்லி உறவென்ற கல்வி நான் சொல்லவா