Oda Thanni Uppu Thanni |
---|
ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது பெண் மனசு மாறவும் மாறாது ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது பெண் மனசு மாறவும் மாறாது
தங்கத்த சுட்டாலும் தன்னிறம் போகாது புத்திதான் கெட்டாலும் அன்பு மட்டும் மாறாது
ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது பெண் மனசு மாறவும் மாறாது
முத்தாடும் முல்லை கொடியோ முள்ளுக்குள் சிக்கிக்கிட்டா கண்ணீரால் கன்னத்த சுட்டுக்கிட்டாள் திண்டாடும் ராமன் இவனோ எங்கெங்கோ தேடிப்புட்டான் கண்ணுக்குள் கண்ணீர மூடிக்கிட்டான்
தூது செல்லும் வான் மேகம் ஜன்னல் பக்கம் வாராதா மோதிச் செல்லும் பூங்காற்று சேதி சொல்லிப் போகாதா சீதையின் கண்ணீரும் சீக்கிரம் காயாதா
ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது பெண் மனசு மாறவும் மாறாது தங்கத்த சுட்டாலும் தன்னிறம் போகாது புத்திதான் கெட்டாலும் அன்பு மட்டும் மாறாது ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது பெண் மனசு மாறவும் மாறாது
ஊரெல்லாம் சொல்லித் திரியும் யாருக்கு புத்தியில்லை நான் சொல்வேன் ஊருக்கு புத்தியில்லை பெண் வாழ்வில் எல்லாமே அவலம் சாவுக்கும் சக்தியில்லை பின்னென்ன சாமிக்கும் வெட்கமில்லை
தாலிக் கட்ட ஆளானாள் தாலிக் கட்டி சேயானாள் மாலை தந்த கண்ணாளன் மங்கைக்கொரு தாயானான் கட்டிலுக்கும் வந்தாலும் தொட்டிலுக்கு பாட்டானாள்
ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது பெண் மனசு மாறவும் மாறாது தங்கத்த சுட்டாலும் தன்னிறம் போகாது புத்திதான் கெட்டாலும் அன்பு மட்டும் மாறாது ஆரிராரோ ஆரிரரோ ஆரிரராராரோ ஆரிரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ ஆரிரராராரோ ஆரிரோ ஆரிரராரோ