Oho Nilarani Ullam |
---|
ஓஹோ நிலா ராணி உள்ளம் கவர்ந்தாய் நீ எழில் ஊற்றாகவே இளங் காற்றாகவே இன்பம் மூட்டும் ரூபவாணி ஓஹோ நிலா ராணி உள்ளம் கவர்ந்தாய் நீ எழில் ஊற்றாகவே இளங் காற்றாகவே இன்பம் மூட்டும் ரூபவாணி
நீல ஓடையில் அல்லியைப் போலே நீந்தும் பெண் அன்னமே நீல ஓடையில் அல்லியைப் போலே நீந்தும் பெண் அன்னமே உனை சூழும் எண்ணிலாஆஅ உனை சூழும் எண்ணிலா தாரகை எல்லாம் தோழி மாதர் தானோ உனை சூழும் எண்ணிலா தாரகை எல்லாம் தோழி மாதர் தானோ உலகம் யாவுமே உன்னாசையாலே உலகம் யாவுமே உன்னாசையாலே உள்ளம் சுழன்றாடுதே
ஓஹோ நிலா ராணி உள்ளம் கவர்ந்தாய் நீ எழில் ஊற்றாகவே இளங் காற்றாகவே இன்பம் மூட்டும் ரூபவாணி
புதுமை ஒளி வெள்ளமாய் ஹாஆஅஆஅ பூலோகமெங்குமே பொழிகின்ற அமுத மழையே ஹாஆஅஆஅஆஅஹாஆஅ புதுமை ஒளி வெள்ளமாய் பூலோகமெங்குமே பொழிகின்ற அமுத மழையே நீ முதலிரவு பெண் போலே முகிலென்ற திரையிலே முகத்தை மறைப்பதேனோ ஏனோ
வானவீதியில் ஊர்வலம் போலே வந்த பெண் தெய்வமே வானவீதியில் ஊர்வலம் போலே வந்த பெண் தெய்வமே உனை காணும் என்னையே தண்ணொளி என்னும் கைகள் தீண்டலாமோ அழகின் ஜோதியே உன்னால் என்னுள் ஆவல் அலை மோதுதே
ஓஹோ நிலா ராணி உள்ளம் கவர்ந்தாய் நீ எழில் ஊற்றாகவே இளங் காற்றாகவே இன்பம் மூட்டும் ரூபவாணி