Onedrodu Onedranaom |
---|
லல லாலா லல லாலா
லல லாலா லல லாலா லாலா
ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு
கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு
என் கண்ணான கண்ணா
பண்பாடி வந்தேன்
வாழ்வென்று உன்னோடு
வாழ்வேன்
ஒன்றோடு ஒன்றானோம்
அன்போடு
பூவும் கொண்டேன்
மஞ்சள் கொண்டேன்
காதலின் தீபம்
ஏற்றி வைத்தேன்
காவல் தந்தான்
கருணையும் தந்தான்
கைகளில் மாலை சூடி நின்றான்
பார்வைகள் சேரும்
பாசமும் பொங்கும்
பூந்தமிழாலே வாழ்த்தினான்
என் எண்ணம்
பொன் வண்ணம்
இன்பம் எங்கெங்கும்
தததம்தம்தம்தம்தம்
ஒன்றோடு ஒன்றானோம்
அன்போடு
கொண்டாடும் இன்பங்கள்
நெஞ்சோடு
காலம் யாவும்
கவிதைகள் சொல்லி
கைகளில் ஆடி
வாழ்ந்திடுவேன்
காணும் யாவும்
இனிமைகள் கொள்ள
கண்ணோடு கண்ணாய்
சேர்ந்திருப்பேன்
நல்வரம்வேண்டும்
நன்மைகள் வேண்டும்
நல்மனதோடு கேட்கிறேன்
என் உள்ளம்
உன் இல்லம்
இன்பம் எங்கெங்கும்
தததம்தம்தம்தம்தம்
ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு
கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு
என் கண்ணான கண்ணா
பண்பாடி வந்தேன்
வாழ்வென்று உன்னோடு
வாழ்வேன்
ஒன்றோடு ஒன்றானோம்
அன்போடு
கொண்டாடும் இன்பங்கள்
நெஞ்சோடு