Oru Kootil Sila Kaalam |
---|
பூவே விடை கொடு புறப்பட விரும்புது பூங்காற்று இந்த வாழ்வே ஒரு வேஷம் விழிகளில் இதற்கேன் நீரூற்று விழிகளில் இதற்கேன் நீரூற்று
ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான சொந்தங்கள் திசை மாறலாம் விடை கூறி வெளியேறும் இந்நேரம் கண்ணீரில் இசை பாடலாம் நிஜமின்று நிழலானது நிஜமின்று நிழலானது கூட்டு பறவை தனது சிறகை திரும்ப விரிக்கலாம்
ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான சொந்தங்கள் திசை மாறலாம் விடை கூறி வெளியேறும் இந்நேரம் கண்ணீரில் இசை பாடலாம்
யாருக்கு யார் இங்கு உறவு இதை ஊருக்கு யார் சொல்வது கனவுக்குள் உண்டான கனவு இதில் யார் நெஞ்சை யார் கொண்டதோ
மண்ணில் வெவ்வேறு வேஷங்கள் நாம் போட வந்தோம் யார் வேஷம் மெய் என்பது எல்லாமே பொய்யாவது
எதற்காக துயர் கொள்வது வாழ்க்கை இருக்கும் வரைக்கும் வருத்தம் மறந்து சிரிக்கலாம்
ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான சொந்தங்கள் திசை மாறலாம் விடை கூறி வெளியேறும் இந்நேரம் கண்ணீரில் இசை பாடலாம்
தெய்வானை ஸ்ரீவள்ளி தலைவா திருசெந்தூரின் வடிவேலவா நான் செய்த பூஜைகள் குறைவா எந்தன் குல தெய்வம் நீயல்லவா
சூடும் பூவோடும் பொட்டோடும் நான் வாழ வேண்டும் ஈராறு கண்ணில்லையா ஈராறு கையில்லையா இருந்தென்ன பலன் சொல்லய்யா வேண்டி வணங்கும்பொழுது உதவி புரிய மறுப்பதோ