Oru Thethi Paarthaal

Oru Thethi Paarthaal Song Lyrics In English

பாடலாசிரியர் : வாலி

ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும் உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

முதல் முதல் தொடும் போது மடல் விடும் உயிர் காதல் வா வா எந்தன் வாழ்வே

ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும் உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

பார்வை மீது உந்தன் பேரழகே மனப்பாடம் செய்யும் இந்த பூங்குருவி நேரில் ஆடி வரும் தேன் அருவி இதில் நீந்த வேண்டும் இந்த ஆண் குருவி

கோடையிலும் இதழ் காய்வதில்லை ஆசையின் அலைதான் ஓய்வதில்லை காதல் கதை என்றும் தோற்றதில்லை தேவனின் விதியில் மாற்றம் இல்லை

நாள் முழுக்க உந்தன் ஞாபகம்தான் எதிர்பார்த்திருக்கும் இந்த பூ முகம்தான்

ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும் உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

போடவேண்டும் ஒரு பூ விலங்கை இசை பாடவேண்டும் உந்தன் கால் சலங்கை ஏற்ற வேண்டும் சின்ன பூ திரியை அதில் பார்க்க வேண்டும் முதல் ராத்திரியை

தாமரையே சிறு வான்பிறையே மார்பினில் வழியும் தேன் மழையே காதலனே இசை பாடகனே கீதங்கள் பொழியும் பாவலனே

நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே குளிர் நீர் இல்லையே துள்ளும் மீன் இல்லையே

ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும் உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

முதல் முதல் தொடும் போது மடல் விடும் உயிர் காதல் இருவர் : வா வா எந்தன் வாழ்வே