Pillai Thoonga Thaalattu |
---|
பிள்ளை தூங்க தாலாட்டு கண்ணன் தூங்க என் பாட்டு எந்தன் தூக்கம் எங்கோ தூங்கி போனதோ ஓஓஓ பிள்ளை தூங்க தாலாட்டு
காதல் கொள்ள மன்னனும் இல்லை கண்கள் தூங்குமா காவல் கொள்ள அண்ணனும் இல்லை அமைதி தோன்றுமா
உதிர்ந்து போன உறவுகள் இங்கே ஒன்று கூடுமா உடைந்து போன மண் குடம் மீண்டும் ஒன்று சேருமா கரைகள் ரெண்டும் இல்லாமல் நதியும் நகருமா கல்லான தெய்வங்கள் பதிலை சொல்லுமா
பிள்ளை தூங்க தாலாட்டு தங்கை தூங்க என் பாட்டு காலம் கூடும் பெண்ணே கண்கள் தூங்கம்மா ஓஓஒ பிள்ளை தூங்க தாலாட்டு
இரவு மாறும் பகல் வந்து சேரும் இயற்கை சொன்னது இன்பம் துன்பம் ரெண்டுக்கும் என்றும் முடிவு உள்ளது
அள்ளி தேற்ற ஆளில்லை என்று யார் சொன்னது அணைத்து கொள்ளும் உறவுகள் எல்லாம் அருகில் உள்ளது இமையை மூடிக் கொள்ளாமல் விழியும் அழுதது நானாக நான் மாற நாளும் வந்தது
பிள்ளை தூங்க தாலாட்டு தங்கை தூங்க என் பாட்டு காலம் கூடும் பெண்ணே கண்கள் தூங்கம்மா ஓஓஒ பிள்ளை தூங்க தாலாட்டு பிள்ளை தூங்க தாலாட்டு