Polladha Aasa Vanthu

Polladha Aasa Vanthu Song Lyrics In English


பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்



பொல்லாத ஆச வந்து சொல்லாத சேதி சொல்லும் பொல்லாத ஆச வந்து சொல்லாத சேதி சொல்லும் எல்லாமே காதலின் குறும்புகள் உள்ளாடும் ஆசையின் அரும்புகள்

பொல்லாத ஆச வந்து சொல்லாத சேதி சொல்லும்

செண்டாடும் பருவமும் உருவமும் கொண்டாடும் இளமையும் புதுமையும் செண்டாடும் பருவமும் உருவமும் கொண்டாடும் இளமையும் புதுமையும்

கண்டேனே ஆயிரம் மலர்களை கொண்டேனே ஆசைகள் மனதிலே கண்டேனே ஆயிரம் மலர்களை கொண்டேனே ஆசைகள் மனதிலே

பொன் மானே அருகில் வா செந்தேனே பருக வா பொன் மானே அருகில் வா செந்தேனே பருக வா

பொல்லாத ஆச வந்து சொல்லாத சேதி சொல்லும் எல்லாமே காதலின் குறும்புகள் உள்ளாடும் ஆசையின் அரும்புகள்


பொல்லாத ஆச வந்து சொல்லாத சேதி சொல்லும்

அன்போடு கனிந்தது ஒரு மனம் நெஞ்சோடு இணைந்தது ஒரு கணம் அன்போடு கனிந்தது ஒரு மனம் நெஞ்சோடு இணைந்தது ஒரு கணம்

உல்லாச காவிய கனவுகள் சந்தோஷம் ஆனந்தம் உறவுகள் உல்லாச காவிய கனவுகள் சந்தோஷம் ஆனந்தம் உறவுகள்

கண்ணா வா பழக வா கையோடு கலந்து வா ஹோய்

இருவர் : பொல்லாத ஆச வந்து சொல்லாத சேதி சொல்லும் எல்லாமே காதலின் குறும்புகள் உள்ளாடும் ஆசையின் அரும்புகள்