Pulli Maan Pola Thulli Thulli |
---|
புள்ளிமான் போலே துள்ளி துள்ளி ஓடும் கன்னி மான் நடை எங்கே ஹோய் கன்னி மான் நடை எங்கே
பொன்னிறமாக தன்னிறம் மாறி பொலிவதன் பொருள் என்ன ஹோய் பொலிவதன் பொருள் என்ன
அன்னநடை தளர்ந்து சின்ன இடை விரிந்து இருப்பதன் கதை என்ன ஹோய் இருப்பதன் கதை என்ன
அன்னை இவளென்று அன்பு மொழி கூறும் மழலையின் வரவன்றோ ஹோய்மழலையின் வரவன்றோ

தங்கமகன் தோன்ற தன்னருள் தந்த ஆண்டவன் அருள் போற்றும் அந்த ஆண்டவன் அருள் போற்று சிங்க மகன் தோன்ற சத்திய சந்தன் மன்னவன் செயல் போற்று இவன் மன்னவன் செயல் போற்று
பாங்குடன் பாடம் பள்ளி கற்ற பாவையின் திறன் போற்று பாவையின் திறன் போற்று தாங்கிட மகனை தந்திட கூறி தோழிக்கு வளைக்காப்பு ஹூம்தோழிக்கு வளைக்காப்பு
புள்ளிமான் போலே துள்ளி துள்ளி ஓடும் கன்னி மான் நடை எங்கே ஹோய் கன்னி மான் நடை எங்கே
பொன்னிறமாக தன்னிறம் மாறி பொலிவதன் பொருள் என்ன ஹோய் பொலிவதன் பொருள் என்ன
அன்னநடை தளர்ந்து சின்ன இடை விரிந்து இருப்பதன் கதை என்ன ஹோய் இருப்பதன் கதை என்ன
அன்னை இவளென்று அன்பு மொழி கூறும் மழலையின் வரவன்றோ ஹோய்மழலையின் வரவன்றோ
வள்ளல் பாரி இல்லாக் குறையை நீக்கிட மகன் வருவான் நீக்கிட மகன் வருவான் வள்ளுவன் குறளை வாழ்வினில் தினமும் கேட்டிட மகன் வருவான் கேட்டிட மகன் வருவான்
பாட்டுக்கு ஒருவன் பாரதி என்று பாடிட மகன் வருவான் பாடிட மகன் வருவான் அவன் பைந்தமிழ் மொழியில் காவியம் ஆயிரம் தீட்டிட மகன் வருவான் தீட்டிட மகன் வருவான்