Punnai Vana Poonguyile

Punnai Vana Poonguyile Song Lyrics In English

ஆஆஹ்ஆஹ்ஆஅ ஆஆஹ்ஆஹ்ஆஅஆஆ ஆஆஹ்ஆஹ்ஆ

புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா பூப் பூக்கும் பொழுதாச்சு பூ விழியும் பூத்தாச்சு அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே கனவானதே பல கனவானதே

புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா

என்னோடு பேசும் இளம் தென்றல் கூட என் கேள்விக்கென்று பதில் கூறுது சொன்னாலே புரியும் உன் கண்ணின் மொழியும் முன்னாலே வந்து பதில் கூறு நீ

என் கண்கள் சொல்லும்ம்ம்ஹா என் கண்கள் சொல்லும் மொழி காதலே என்றென்றும் செல்லும் விலகாமலே தனியாக நின்றாலும் உன் தாகமே துணையாக வந்தாலும் தணியாதது

புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா

அகல் என்னும் தீபம் அணையாமல் வீசும் அழகாக ஆடும் மறுத்தென்ன பேசும் தூண்டாத விளக்கு நாம் கொண்ட காதல் ஏற்றாமல் ஒளியை எந்நாளும் வீசும்

அலை ஓய்ந்து போகும்ம்ம்ஹோய் அலை ஓய்ந்து போகும் கடல் மீதிலே நிலையான காதல் ஓயாதம்மா ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலுமே என்னோடு நீ தானே என் ஜீவனே

புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா பூப் பூக்கும் பொழுதாச்சு பூ விழியும் பூத்தாச்சு அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே கனவானதே பல கனவானதே

புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வாஆ