Purushna Kaikkulle Pottukanum |
---|
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
புருஷனை கைக்குள்ளே போட்டுக்கணும் நீ புத்திசாலியான்னு கண்டுக்கணும் மனசுக்குள்ளே அவன வச்சுக்கணும் மனசுக்குள்ளே அவன வச்சுக்கணும் அவன் மனசு மாறாம பாத்துக்கணும்
ஆங் புருஷனை கைக்குள்ளே போட்டுக்கணும் நீ புத்திசாலியான்னு கண்டுக்கணும் மனசுக்குள்ளே அவன வச்சுக்கணும் மனசுக்குள்ளே அவன வச்சுக்கணும் அவன் மனசு மாறாம பாத்துக்கணும்
அருமையான பொண்டாட்டியா அமைஞ்சு போயிட்டா அவன் அக்கம் பக்கம் பாக்கமாட்டான் தெரிஞ்சுக்க நீயும் அருமையான பொண்டாட்டியா அமைஞ்சு போயிட்டா அவன் அக்கம் பக்கம் பாக்கமாட்டான் தெரிஞ்சுக்க நீயும்
முந்தான முடிச்சிலே ஊஞ்சல் கட்டி ஆடம்மா அத்தானின் அணைப்பிலே காதல் பாட்டு பாடம்மா முந்தான முடிச்சிலே ஊஞ்சல் கட்டி ஆடம்மா அத்தானின் அணைப்பிலே காதல் பாட்டு பாடம்மா
புருஷனை கைக்குள்ளே போட்டுக்கணும் நீ புத்திசாலியான்னு கண்டுக்கணும் மனசுக்குள்ளே அவன வச்சுக்கணும் அவன் மனசு மாறாம பாத்துக்கணும்
புருஷனை கைக்குள்ளே போட்டுக்கணும் நீ புத்திசாலியான்னு கண்டுக்கணும் ஹ்ம்ம்ம்ம்
ஆசையோடு அணைக்கும்போது கொஞ்சவும் வேணும் அவன் ஆத்திரத்தில் அடிக்கும்போது பணிஞ்சு போகணும் ஆசையோடு அணைக்கும்போது கொஞ்சவும் வேணும் அவன் ஆத்திரத்தில் அடிக்கும்போது பணிஞ்சு போகணும்
எதிர்த்து பேசினா எரிச்சல் வளருமே எண்ணத்த புரிஞ்சுகிட்டா இன்பம் வளருமே எதிர்த்து பேசினா எரிச்சல் வளருமே எண்ணத்த புரிஞ்சுகிட்டா இன்பம் வளருமே
புருஷனை கைக்குள்ளே போட்டுக்கணும் நீ புத்திசாலியான்னு கண்டுக்கணும் ஹ்ம்ம்
பசிக்குபோது தாயாகி உணவு ஊட்டனும் அவன் பழகும்போது சேயாகி மழலை பேசணும் பசிக்குபோது தாயாகி உணவு ஊட்டனும் அவன் பழகும்போது சேயாகி மழலை பேசணும்
கொஞ்சும்போது கட்டிலிலே தாசியாகணும் கவலை கொள்ளும்போது துணையிருக்கும் நண்பனாகணும் கொஞ்சும்போது கட்டிலிலே தாசியாகணும் கவலை கொள்ளும்போது துணையிருக்கும் நண்பனாகணும்
புருஷனை கைக்குள்ளே போட்டுக்கணும் நீ புத்திசாலியான்னு கண்டுக்கணும் மனசுக்குள்ளே அவன வச்சுக்கணும் அவன் மனசு மாறாம பாத்துக்கணும் ஆஹ்