Rottoram Veettukkari |
---|
ரோட்டோரம் வீட்டுக்காரி ரோசாப்பு சேலைக்காரி ரோட்டோரம் வீட்டுக்காரி ரோசாப்பு சேலைக்காரி நிக்கட்டுமா போகட்டுமா மொறச்சி நிக்கிற மொறப்பொண்ணே தொட்டாக்கப் பத்திக்கிடுமா ஏப்புள்ள ஒன்ன நான் தொட்டாக்கப் பத்திக்கிடுமா
ஹேய் ரோட்டோரம் வீட்டுக்காரி ரோசாப்பு சேலைக்காரி நிக்கட்டுமா போகட்டுமா மொறச்சி நிக்கிற மொறப்பொண்ணே தொட்டாக்கப் பத்திக்கிடுமா ஏப்புள்ள ஒன்ன நான் தொட்டாக்கப் பத்திக்கிடுமா ஆஆஆஹ்
நாட்டுல பக்கத்தில நாங்க இல்ல சாமி நாங்க நாடு பூரா சுத்தி வந்தோம் கேளுங்க சாமி கொண்ட ஊசி வாங்கலையோ சாமி செக்க கோணி ஊசி வாங்கலையோ சாமி கொண்ட ஊசி வாங்கலையோ சாமி இப்பக் குஞ்சம் குஞ்சம் வாங்கலையோ சாமி
மொட்டமலப் பக்கத்துல மூணர சாமி அங்க கோட்டக்கட்டி வாழ்ந்தவங்க கூட்டணி சாமி வண்ணமணி வாங்கலையோ சாமி சிப்பி வடிவழகா வாங்கலையோ சாமி தெப்பக்கொளம் பக்கதுல வேப்பமரம் சாமி அந்த வேப்பமரம் உச்சியில மாடப்புறா புறா புறா புறா புறா புறா
ஹே அத்தப் பெத்த ரத்தினமே ஆளவந்த சித்திரமே சித்தகத்திப் பூவினமே செம்பவள தாவரமே முத்து முத்து மோகனமே முக்குளிக்கும் சாகரமே நித்திரையும் போனதடி ஒன்ன ஒத்த நெஞ்சு தேடுதடி ஹே நித்திரையும் போனதடி ஒன்ன ஒத்த நெஞ்சு தேடுதடி
ஹே பஞ்சவரண கண்ணழகி பால்கோவா சொல்லழகி நட்சத்திர பொட்டழகி நாவப்பழ கையழகி நந்தவனம் பொன்னழகி நாடாரிஞ்ச பொட்டழகி தொட்டுக் கொள்ள ஆசையடா ஒன்ன சொக்க வைக்கத் தோணுதடா ஹே
செக்க செவந்தவளே செக்க செவந்தவளே செக்க செவந்தவளே கண்ணம்மா எம் பக்கம் வந்து பேசினாக்கா என்னம்மா கண்ணாலக் பாக்குறா கட்டழகத் தாக்குறா தாவித்தாவி சிரிக்கிறா தாவணிய முறுக்குறா
படிக்கட்டுல நிக்கிறியே ஈஸ்வரி நீ பத்திரமா மேல ஏறு ஈஸ்வரி தூக்கத்துல பைய வையி ஈஸ்வரி நான் கடலை முட்டாய் வாங்கித்தரேன் ஈஸ்வரி
ஹே செக்க செவந்தவளே செக்க செவந்தவளே செக்க செவந்தவளே கண்ணம்மா நீ பொங்க வச்சு பேசினாக்க என்னம்மா
நாடு நகரிருக்கும் நாலுக்கானி நெலமிருக்கு ராணி எனக்கு மட்டும் ராப்பகலா சொகமிருக்கு
ஹே ஹே அப்படியா ஜன்னலோரம் நிக்கிறியே கோகிலா உன் கண்ணுக்குள்ள நானிருக்கேன் கோகிலா கிட்ட வந்து முட்டுறியே கோகிலா என் கட்டம் ரொம்ப நல்லாருக்கு கோகிலா
ஹே மாடு மனையிருக்கு மாமனாரு தோப்பிருக்கு ஆடுப் பசிச்சிருக்கு அருங்கம்புல்லுக் கேட்டுருக்கு
காடு இப்போ வளர்ந்திருக்கு கோகிலா நான் கனுக்கனுவா வச்சிருக்கேன் கோகிலா பஞ்சிமெத்த ஒன்னு வாங்கிருக்கேன் கோகிலா நீ செத்த நேரம் தங்கிப் போடி கோகிலா
ஹே கோகிலா ஹே கோகிலா ஹே கோகிலா ஹே கோகிலா ஹே கோ கோ கோ கோ கோ