Tajmahal Ondru

Tajmahal Ondru Song Lyrics In English

தாஜ்மகால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தரா ரரா தரா ரரா

தங்க நிலா ஒன்று என் மனதை கிள்ளியதே தரா ரரா தரா ரரா

தாஜ்மகால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கிள்ளியதே

அந்த ஓசோன் தாண்டி வந்து ஒரு ஒலி துளி பேசியதே இனி எல்லாம் காதல் மயம் எனை கொன்றாய் இந்த யுகம்

சித்திரை மாதம் மார்கழி ஆனது வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா

வீசி வரும் தென்றலை கிழித்து ஆடைகள் நெய்து தருவேனே பூத்து நிற்கும் பூக்களை செதுக்கி காலடி செய்து தருவேனே

வானவில்லின் ஒரு நிறம் பிரித்து உதட்டுக்கு சாயம் தருவானே மின்னல் தரும் ஒளியினை உருக்கி வளையலும் செய்து தருவேனே

என் இதயம் சிறகாச்சு என் இளமை நிஜமாச்சு என் இதயம் சிறகாச்சு என் இளமை நிஜமாச்சு

நீ வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா

தாஜ்மகால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கிள்ளியதே

காற்றை பிடித்து வானத்தில் ஏறி நிலவை திறந்தேன் நீ தெரிந்தாய் மேகம் உடைத்து மெதுவாய் பார்த்தேன் துளியாய் அதிலே நீ தெரிந்தாய்

புல்லை எரித்து சாம்பல் விதைத்தேன் பூவாய் அதிலே நீ முளைத்தாய் கடலை பிடித்து அலைகள் வடித்தேன் நுரைகள் முழுதும் நீ தெரிந்தாய்

நீ கேட்டால் போதுமடி என் உயிரை பரிசளிப்பேன் நீ கேட்டால் போதுமடி என் உயிரை பரிசளிப்பேன்