Tamizh Venthan Pandiyanin |
---|
தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம் தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம் என் தலைவனின் திருமேனி தங்கம் தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம் என் தலைவனின் திருமேனி தங்கம் பகைவர்கள் முன்பு அவன் சிங்கம் பகைவர்கள் முன்பு அவன் சிங்கம் என்னை பார்த்துவிட்டால் காதல் பொங்கும் என்னை பார்த்துவிட்டால் காதல் பொங்கும் அம்மம்மா
தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
தேவர் கடல் கடைந்த அமுதம் அவன் திருமார்பில் நான் மலரும் குமுதம் தேவர் கடல் கடைந்த அமுதம் அவன் திருமார்பில் நான் மலரும் குமுதம் மூவர் வடித்த தமிழ் பதிகம் மூவர் வடித்த தமிழ் பதிகம் அந்த மோகனன் தந்த சுகம் அதிகம் அந்த மோகனன் தந்த சுகம் அதிகம் அம்மம்மா
தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
ராத்திரி பூக்களுக்கு ராஜா என் ரகசிய தோட்டம் கண்ட ரோஜா ராத்திரி பூக்களுக்கு ராஜா என் ரகசிய தோட்டம் கண்ட ரோஜா
சாஸ்திர கீதை சொன்ன கண்ணன் சாஸ்திர கீதை சொன்ன கண்ணன் என்னை தழுவுகையில் காதல் மன்னன் சாஸ்திர கீதை சொன்ன கண்ணன் என்னை தழுவுகையில் காதல் மன்னன் என்னை தழுவுகையில் காதல் மன்னன் அம்மம்மா
தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம் என் தலைவனின் திருமேனி தங்கம் பகைவர்கள் முன்பு அவன் சிங்கம் என்னை பார்த்துவிட்டால் காதல் பொங்கும் அம்மம்மா
தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
என்னடி நாணம் என்று அணைப்பான் என்னடி நாணம் என்று அணைப்பான் நான் ஏதும் சொன்னால் மெதுவாய் சிரிப்பான் தன்னந்தனிமையிலே அழைப்பான் தன்னந்தனிமையிலே அழைப்பான் நல்ல சம்சாரம் போல எண்ணி நடப்பான் நல்ல சம்சாரம் போல எண்ணி நடப்பான் அம்மம்மா
தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
ஆலிலை மேகலைகள் ஆட பொன் அரசிலை நாடகங்கள் கூட ஆலிலை மேகலைகள் ஆட பொன் அரசிலை நாடகங்கள் கூட நாலு குணங்களிலே நான் வாட ஆஆஆஆஆஆஆஆ நாலு குணங்களிலே நான் வாட அடி நாயகியே என்றவன் நாட அடி நாயகியே என்றவன் நாட அம்மம்மா
தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம் என் தலைவனின் திருமேனி தங்கம் பகைவர்கள் முன்பு அவன் சிங்கம் என்னை பார்த்துவிட்டால் காதல் பொங்கும் அம்மம்மா
தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்