Thaalattum Poovondru |
---|
தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று
வெயிலென்றும் நிழலென்றும் கலங்கும் பேதை மனமொன்று தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று
உள்ளம் எனும் வெள்ளை நிலவினில் கள்ளங்கள் யார் தந்தார் எண்ணம் அது செல்லும் வழியினில் பள்ளங்கள் யார் செய்தார்
புயல் இன்று மலர் கண்டு பூந்தென்றல் ஆகாதோ பூவொன்று துயர் கொண்டு புயலென்று மாறாதோ யார் இங்கு எதனை கண்டார் நாளும் மாறும் வாழ்க்கையில்
தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று வெயிலென்றும் நிழலென்றும் கலங்கும் பேதை மனமொன்று தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று
தொட்டில் முதல் தூங்கும் வரை இங்கு ஓயாத போராட்டம் விட்டில் என வாழும் மனிதர்கள் கண்ணெங்கும் நீரோட்டம்
வழியெங்கே முடிவெங்கே முடியாத சூதாட்டம் புயல் சூழும் விதி மாறும் இனியென்ன தேரோட்டம் போர் வரும் வழியினில் நின்று வேதம் சொன்னால் ஆகுமோ
தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று வெயிலென்றும் நிழலென்றும் கலங்கும் பேதை மனமொன்று தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று