Thaali Kattiya Thangakili |
---|
ஓஒஹ் ஓஹ் ஓ ஓ ஆஅஹ் ஆஹ் ஆஆ
தாலிக் கட்டிய தங்கக்கிளியே தள்ளிப் படுத்துக்கடி ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கடி காலை வரைக்கும் கண் விழிக்கும் வேலையில்லையடி தீபம் கொறச்சு வைக்கணுமா தேவையில்லையடி காஞ்சிபுரத்து சேலைய விட்டு காவிய கொஞ்சம் கட்டிக்கோடி
தாலிக் கட்டிய தங்கக்கிளி நான் தள்ளிப் படுத்துக்கவா ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கவா
கிளியே கிளியே உள்ளே ரத்தம் கொதிக்குதடி மனசு இருந்தும் சொன்ன சொல்லு தடுக்குதடி மல்லிகப்பூ வாடுதய்யா மனசோ போராடுதய்யா என்னமோ துள்ளுது என்னையே கிள்ளுது சத்தியம் உள்ளது பத்தியம் நல்லது லட்சியம் கொல்லுது
தாலிக் கட்டிய தங்கக்கிளி நான் தள்ளிப் படுத்துக்கவா ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கவா
தலைவா தலைவா இவள் பந்தி விரிப்பதில்ல பருவம் தவிச்சா இவ முந்தி விரிப்பதில்ல குடிக்க பால் சொம்பிருக்கு குடிச்சா வீண் வம்பிருக்கு தவிக்கும் செல்லய்யா தள்ளித்தான் நில்லய்யா லட்சியம் தொலைய இன்னிக்கு இல்லையா பல்லவி சொல்லய்யா