Thalaiye Nee Vanangaai

Thalaiye Nee Vanangaai Song Lyrics In English


தலையே நீ வணங்காய் தலையே நீ வணங்காய் தலைமாலை தலைக்கணிந்து தலைமாலை தலைக்கணிந்து தலையாலே பலிதேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்

கண்காள் காண்மின்களோ கண்காள் காண்மின்களோ கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை எண்டோள் வீசி நின்றாடும் பிரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ

செவிகாள் கேண்மின்களோ செவிகாள் கேண்மின்களோ சிவன் எம்மிறை செம்பவள எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ் செவிகாள் கேண்மின்களோ

மூக்கே நீ முரலாய் முதுகாடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய் முதுகாடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்

வாயே வாழ்த்து கண்டாய் வாயே வாழ்த்து கண்டாய் மதயானை யுரிபோர்த்து மதயானை யுரிபோர்த்து பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை வாயே வாழ்த்துகண்டாய்

நெஞ்சே நீ நினையாய் நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய்


கைகாள் கூப்பித்தொழீர் கைகாள் கூப்பித்தொழீர் கடிமாமலர் தூவி நின்று கடிமாமலர் தூவி நின்று பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகாள் கூப்பித்தொழீர்

ஆக்கை யாற்பயனென் அரன்கோயில் வலம் வந்து பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாத இவ்வாக்கை யாற்பயனென் பயன் என்ன

கால்க ளாற்பயனென கால்க ளாற்பயனென கறைக் கண்டனுறை கோயில் கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற்பயனென கறைக் கண்டனுறை கோயில் கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற்பயனென

உற்றார் ராருளரோ உற்றார் ராருளரோ உற்றார் ராருளரோ உயிர் கொண்டு போம்பொழுது குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்குற்றார் ஆருளரோ