Thamarai Ilaiye

Thamarai Ilaiye Song Lyrics In English


ஆஆஆஹ்ஆஆ ஆஆஆஹ்ஆஆ

தாமரை இலையே தூது செல்லாயோ தலைவனிடம் என் துயர் சொல்லாயோஓ தாமரை இலையே தூது செல்லாயோ தலைவனிடம் என் துயர் சொல்லாயோ

மாமன்னன் துஷ்யந்தன் முன் செல்லாயோ மாமன்னன் துஷ்யந்தன் முன் செல்லாயோ மாதிவள் சகுந்தலை மனம் சொல்லாயோ மாதிவள் சகுந்தலை மனம் சொல்லாயோ

தாமரை இலையே தூது செல்லாயோ தலைவனிடம் என் துயர் சொல்லாயோஓ

காதலன் வரவை பார்த்திருந்தேன் காதலன் வரவை பார்த்திருந்தேன் அவன் காதலுக்கேங்கி காத்திருந்தேன் காதலுக்கேங்கி காத்திருந்தேன்

பெண் பேதை என்னுள்ளம் தேற்றி வந்தேன் பெரும் வேதனையோடு நான் வீற்றிருந்தேன் என்று

தாமரை இலையே தூது செல்லாயோ தலைவனிடம் என் துயர் சொல்லாயோ


மார்பினில் பூங்கணை தொடுத்தானே காமன் மார்பினில் பூங்கணை தொடுத்தானே காமன் மங்கையின் அங்கம் சுட்டெரித்தானே மங்கையின் அங்கம் சுட்டெரித்தானே

தாமரை இலையின் தூதறிந்தேனே தாமரை இலையின் தூதறிந்தேனே தேன் மலர் சகுந்தலை துயர் அறிந்தேனே தேன் மலர் சகுந்தலை துயர் அறிந்தேனே

தாமரை இலையே தூது செல்லாயோ மாமன்னன் துஷ்யந்தன் துயர் சொல்லாயோ

சிந்தனையை கொள்ளைக் கொண்டுதான் சென்றான் சிந்தனலை தந்தே சந்திரன் போல் வந்தான்

வான்மதிதான் வாட்டுகின்றான் செந்தணலாக தேன் மொழியும் மீன் விழியால் சுடுகின்றாளே

தாமரை இலையே தூது செல்லாயோ மாமன்னன் துஷ்யந்தன் துயர் சொல்லாயோ