Thanga Kudam Eduthu |
---|
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
ஹேய் தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே ஆத்தங்கரையிலே ஆவி இருக்குதாம் கன்னிப் பொண்ணுங்கள தேடி இருக்குதாம் ஆத்தங்கரையிலே ஆவி இருக்குதாம் கன்னிப் பொண்ணுங்கள தேடி இருக்குதாம்
கொஞ்சம் பாத்துப் போங்க பாத்துப் போங்க சிட்டுகளா நாங்க கூட வந்தா ஆபத்தில்ல மொட்டுகளா
தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே ஹேய்
காதலுல தோத்துப் போன ஆவி ஒன்னு மோகத்துல ஆத்துப் பக்கம் சுத்தி வருதாம் காதலுல தோத்துப் போன ஆவி ஒன்னு மோகத்துல ஆத்துப் பக்கம் சுத்தி வருதாம்
தன்னந்தனியாக நீங்க போகாதீங்க ஆவி கிட்ட மாட்டிக்கிட்டு வாடாதீங்க தன்னந்தனியாக நீங்க போகாதீங்க ஆவி கிட்ட மாட்டிக்கிட்டு வாடாதீங்க
போகாதே போகாதே ஆத்துப் பக்கம் போகாதே தேடாதே தேடாதே ஆபத்த நீ தேடாதே
போகாதே போகாதே ஆத்துப் பக்கம் போகாதே தேடாதே தேடாதே ஆபத்த நீ தேடாதே
அட கருகரு கருகரு கருவென பூதம் அங்கே உண்டு போகாதே
தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே
கல்யாணத்தப் பண்ணிப்புட்டு சாந்தி முகூர்த்தம் முடியாம குளிக்கும் போது செத்துப் போன ஆவி ஒன்னு கன்னிப் பொண்ணு யாராவது வர மாட்டாங்களான்னு காஜில காத்துட்டிருக்குது
அப்போ கன்னிப் பொண்ணு பூவாயி தண்ணி எடுக்கத் தனியாக சாயங்காலம் ஆத்துப் பக்கம் போயிருக்கா காத்திருந்த காளப் பையன் கன்னிப் பொண்ண கண்ட போது கண்ட போது அவ்வளவு தான் ஒரே அடி அம்மா
பக்கத்துல நாங்க வந்தா பாவம் இல்ல அக்கம் பக்கம் ஆவி வரும் பயமும் இல்ல பக்கத்துல நாங்க வந்தா பாவம் இல்ல அக்கம் பக்கம் ஆவி வரும் பயமும் இல்ல
எங்க துனை உங்களுக்குக் காவல் வரும் எப்பவுமே அச்சம் இன்றி வாழ்வு தரும் எங்க துனை உங்களுக்குக் காவல் வரும் எப்பவுமே அச்சம் இன்றி வாழ்வு தரும்
பொன்னம்மா பூவம்மா கேளம்மா பாரம்மா ஆளான பொண்ணம்மா எம் பேச்ச நீ கேளம்மா
பொன்னம்மா பூவம்மா கேளம்மா பாரம்மா ஆளான பொண்ணம்மா எம் பேச்ச நீ கேளம்மா
அட பொன்னம்மா பூவம்மா கேளம்மா பாரம்மா ஆளான பொண்ணம்மா எம் பேச்ச நீ கேளம்மா
தளதள தளதள தளவென பொண்ணு என்ன விட்டுப் போகாதே
தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே ஆத்தங்கரையிலே ஆவி இருக்குதாம் கன்னிப் பொண்ணுங்கள தேடி இருக்குதாம்
கொஞ்சம் பாத்துப் போங்க பாத்துப் போங்க சிட்டுகளா நாங்க கூட வந்தா ஆபத்தில்ல மொட்டுகளாஹேய் ஹேய்
தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே ஹேய் தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே ஆஹான்
தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே ஹேய் ஹேய் தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே