Thanga Malare Ullame |
---|
தங்க மலரே உள்ளமே ததும்பி ஓடும் வெள்ளமே தங்க மலரே உள்ளமே ததும்பி ஓடும் வெள்ளமே அந்தி பகலாய் எந்தன் மனதினில் அருள் விளங்கும் தெய்வமே
தங்க மலரே உள்ளமே ததும்பி ஓடும் வெள்ளமே
தூக்கி வைத்த கரந்தனிலே தாயைக் கண்டேனே நீ துள்ளி வந்து குதித்தபோது சேயைக் கண்டேனே
சூடி வைத்த மலர்களில் உன் கருணை கண்டேனே சூடி வைத்த மலர்களில் உன் கருணை கண்டேனே என்னை தொட்டிழுத்து அணைத்தபோது தெய்வம் கண்டேனே
தங்க மலரே உள்ளமே ததும்பி ஓடும் வெள்ளமே
எந்த நாட்டில் பொன்னி வெள்ளம் பெருகி ஓடுமோ எந்த நாட்டில் கோபுரங்கள் உயர்ந்து காணுமோ அந்த நாட்டில் பிறந்து வந்த தலைவனல்லவா அந்த நாட்டில் பிறந்து வந்த தலைவனல்லவா என்னை ஆள வந்து வாழ வைத்த இறைவனல்லவா
தங்க மலரே உள்ளமே ததும்பி ஓடும் வெள்ளமே அந்தி பகலாய் எந்தன் மனதினில் அருள் விளங்கும் தெய்வமே ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்