Thanga Pappa Sandham Duet

Thanga Pappa Sandham Duet Song Lyrics In English


ஆண் : ஸநிஸக ஸநிஸரி ஸநிஸமக ஸநிரிஸா பெண் : லலலலலா லாலலலாலா

லாலாலா

ஆண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும் தந்தை நெஞ்சம் தாளம் போடும் இது இன்பத் தொல்லையோ சுக ராகமில்லையோ ஒரு தாயின் உள்ளமே அன்புக் கோயில் இல்லையோ அந்தக் கோயில் வாழும் தெய்வமே

பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும் தாயின் நெஞ்சம் தாளம் போடும்

ஆண் : பூமணக்கும் பெண் மயிலே பால் மணக்கும் நேரமோ பெண் : ம்ம்ம்பொங்கி வரும் தாய்மையிலே பெண் மனமும் பாடுமோ

ஆண் : அன்னை நெஞ்சில் ஊறும் எண்ணங்களை பிள்ளைதான் அறிந்திடுமோ பெண் : பிஞ்சுக் கால்கள் மோதி பேசும் மொழி அன்னைக்கே புரிந்திடுமோ

ஆண் : கர்ப்பம் என்னும் கோயிலிலே கண்ணை மூடித் தூங்கும் பெண் : பிள்ளை உன்னைக் காண்பதற்கே தாயின் நெஞ்சம் ஏங்கும் ஆண் : பல ஜென்மம் தொடரும் பந்தமே தங்கப் பாப்பா சந்தம் பாடும் தந்தை நெஞ்சம் தாளம் போடும்


பெண் : தந்தை உந்தன் கண்களிலே தங்க மகள் பார்க்கிறேன் ஆண் : ம்ம்ம்ஓசையின்றி பேசும் மொழி காதை வைத்து கேட்கிறேன்

பெண் : சின்ன சின்ன முல்லை கிளிப்பிள்ளை மெல்லத்தான் பேசிடுமோ

ஆண் : தத்தி தத்தி தாவி நம் பிள்ளை நெஞ்சில்தான் ஆடிடுமோ பெண் : பிள்ளை ஒன்று இல்லையென்றால் சொல்லும் உன்னால் மாறும் தந்தை நெஞ்சின் ஆசைகளும் பிள்ளை உன்னால் தீரும் உன்னைக் காண கண்கள் ஏங்குது

பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும் தாயின் நெஞ்சம் தாளம் போடும் இது இன்பத் தொல்லையோ சுக ராகமில்லையோ ஒரு தாயின் உள்ளமே அன்புக் கோயில் இல்லையோ அந்தக் கோயில் வாழும் தெய்வமே

பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும் ஆண் : தந்தை நெஞ்சம் தாளம் போடும்