Thazhampoove Thaalam Podu

Thazhampoove Thaalam Podu Song Lyrics In English


தாழம்பூவே தாளம் போடு நான் பாட தாழம்பூவே தாளம் போடு நான் பாட பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட அடி சேலைக் கட்டும் பூவே தேனில் ஊறும் தீவே அன்பே அன்பே நீ வா

தாழம்பூவே தாளம் போடு நான் பாட பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட



பவளம் போலும் அதரம் சிந்தும் நித்திலம் லால்ல லா அதில் பதியம் போடும் கனிவாய் முத்தம் நித்தமும் லால்ல லா

பவளம் போலும் அதரம் சிந்தும் நித்திலம் அதில் பதியம் போடும் கனிவாய் முத்தம் நித்தமும் எனையே பருகும் விழிகள் இமையால் அழைக்கும் கிளிகள்

மோகப் பந்து உடையினில் மூடிக்கொண்டு ராகச் சிந்து விழிகளில் பாடிக்கொண்டு

அழகிய தாழம்பூவே தாளம் போடு நான் பாட பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட அடி சேலைக் கட்டும் பூவே தேனில் ஊறும் தீவே அன்பே அன்பே நீ வா


தாழம்பூவே தாளம் போடு நான் பாட பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட

லல லா லல லா லல லா லல லா லல லா லல லா லல லா லல லா

இரவில் தோன்றும் நிலவில் உந்தன் ஆடையோ லால்ல லா உடல் இளகும் மாலைப் பொழுதில் ஆடும் மேடையோ லால்ல லா

இரவில் தோன்றும் நிலவில் உந்தன் ஆடையோ உடல் இளகும் மாலைப் பொழுதில் ஆடும் மேடையோ பனியில் நனையும் கனியோ இடையில் அமுதின் சுவையோ

மாலை நேரம் இரு கனி தோளில் சாயும் சாயும் நேரம் முதுகினில் காயமாகும்

அழகிய தாழம்பூவே தாளம் போடு நான் பாட பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட அடி சேலைக் கட்டும் பூவே தேனில் ஊறும் தீவே அன்பே அன்பே நீ வா அன்பே அன்பே நீ வா