Thenna Mara Thoppukulle

Thenna Mara Thoppukulle Song Lyrics In English


தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா தென்பாண்டி முத்து ஒன்னு தருவா தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா தென்பாண்டி முத்து ஒன்னு தருவா

இந்த ஊருக்குள்ள அவ ஒரு அழகி இந்த ராணி கிட்ட கச்சிதமா பழகி அவ பொன்னான மனசுல புகுந்துக்குவேன்

தென்ன மரத் தோப்புக்குள்ள வருவேன் வருவேன் தென்பாண்டி முத்து ஒன்னு தருவேன் தென்ன மரத் தோப்புக்குள்ள வருவேன் வருவேன் தென்பாண்டி முத்து ஒன்னு தருவேன்

நம்ம ஊருக்குள்ள நான் ஒரு அழகி என்ன வச்சிருக்க கச்சிதமா பழகி இந்த பொன்னான மனசுல புகுந்துக்குவேன்

தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா தென்பாண்டி முத்து ஒன்னு தருவா

பச்சக்கிளி கொத்துனது செவந்திருக்கு செம்பவள ஒதட்டுல சிரிப்பெதுக்குஆ தோட்டத்துல மன்மதனின் காத்தடிச்சு நேத்து வச்ச ஒட்டுச்செடி பூத்திருச்சி

பஞ்சு மெத்தை எனக்கங்கு விரிச்சாச்சு பாய் விரிக்க வேற எடம் கெடச்சாச்சு தண்ணிக் கொடம் தூக்கியிட்டு நடந்தாலே தளும்புது என் மனசு மாமா அட நானிருக்கேன் பாத்துக்கிறேன் ஆத்துப் பக்கம் வாம்மா


தென்ன மரத் தோப்புக்குள்ள வருவேன் வருவேன் தென்பாண்டி முத்து ஒன்னு தருவேன் தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா தென்பாண்டி முத்து ஒன்னு தருவா

மச்சு வீடு ஒன்னு அங்கு உனக்கிருக்கு மண்ணு வீடு கட்டிக்கிற நெனப்பெதுக்கு ஹா மண்ணு வீடு கட்டுறது சரிதாம்மா சின்ன வீடு எனக்கொண்ணு வேணாம்மா

பக்கத்துல பத்து பேரு இருக்கையிலே பக்குவமா எப்படி நீ கூப்புடுவே வெத்தலையில் சுண்ணாம்ப தடவி கிட்டு வெரலால ஜாடை செய்யலாமா அட கம்மாங்கர ஓரத்தில காத்திருப்பேன் ஆமா

தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா தென்பாண்டி முத்து ஒன்னு தருவா தென்ன மரத் தோப்புக்குள்ள வருவேன் வருவேன் தென்பாண்டி முத்து ஒன்னு தருவேன்

இந்த ஊருக்குள்ள அவ ஒரு அழகி என்ன வச்சிருக்க கச்சிதமா பழகி அவ பொன்னான மனசுல புகுந்துக்குவேன்

தென்ன மரத் தோப்புக்குள்ள வருவேன் வருவேன் தென்பாண்டி முத்து ஒன்னு தருவேன் தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா தென்பாண்டி முத்து ஒன்னு தருவா