Thennilangai Mangai |
---|
பாடலாசிரியர் : வாலி
தென்னிலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே பூமகளும் நின்றாடினாள்

வான் பார்க்கும் தென்னை நீராடும் என்னை ஏன் பார்த்து சாய்கின்றதோ வான் பார்க்கும் தென்னை நீராடும் என்னை ஏன் பார்த்து சாய்கின்றதோ
பூந்தேரில் ஏறி போகின்ற தென்றல் என் மீது பாய்கின்றதோ ஆகாய மேகம் நான் கொண்ட கூந்தல் தானென்று எண்ணி தரை வந்து சேரும்
தென்னிலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே பூமகளும் நின்றாடினாள்
பொன் மீன்கள் என்று என் கண்கள் கண்டு செம்மீன்கள் பாராட்டுதோ பொன் மீன்கள் என்று என் கண்கள் கண்டு செம்மீன்கள் பாராட்டுதோ
சேய் போல என்னை தண்ணீரின் வெள்ளம் தாய் போல தாலாட்டுதோ ஏகாந்த நேரம் ஏதேதோ எண்ணம் பூம்பாவை நெஞ்சில் புதுக் கோலம் போடும்