Thithipa

Thithipa Song Lyrics In English


ஹு ஹு வோஹ்
ஹு ஹு வோஹ்

தித்திப்பா தித்திப்பா தித்திப்பாஆ
மின்னலின் நேரடி சந்திப்பாஆஅ
மூச்சை தாக்கி மூர்ச்சை ஆக்கி
ஏதோ தூவும் மாய நொடி
வீசும் காற்றில் பேசும் கீற்றாய்
ஏதோ சொல்லும் நீள முடி
உன் காதின் ஓரம் நீயும் தீண்ட
நாடே ஏங்கி தாவுதடி

தித்திப்பா தித்திப்பா தித்திப்பாஅஆஅ
மின்னலின் நேரடி சந்திப்பாஅஆஅ
மூளை தாக்கி ஊமை ஆக்கி
ஏதோ தூவும் மாய நொடி
மூச்சை தாக்கி மூர்ச்சை ஆக்கி
எங்கோ கொண்டு சேர்க்குதடி

உன்னை தாங்கும் திமிரோடு
எனை பார்க்கும் கால் அணியே
உன்னை பார்த்த சிறு நேரம்
அது வாழ்வின் சாதனையே

கொஞ்சம் நீ நில்லுஹோ ஓ ஓ
எங்கும் போகாதேஹோ ஓ ஓ
ஓடி சென்று ஊரை கூட்டி
உன்னை காட்ட வேண்டுமே


ஹ்ம்ம் ஹு ஹு வோஹ்
ஹ்ம்ம் ஹு ஹு வோஹ்

கவிழாமல் விழி ரெண்டும்
முறைத்துன்னை பார்க்குதடி
எழில் காட்டில் எது உண்மை
இது இன்மை கேட்க்குதடி

பாறை போல் நின்றேன்ஹோ ஓ ஓ
தூளை போல் ஆனேன்ஹோ ஓ ஓ
என்று நான் உன் கைகள் தொட்டு
வாழ்வில் இன்பம் காணுவேன்

தித்திப்பா தித்திப்பா தித்திப்பாஅஆஅ
மின்னலின் நேரடி சந்திப்பாஅஆஅ
வீசும் காற்றில் பேசும் கீற்றை
ஏதோ சொல்லும் நீள முடி
மூச்சை தாக்கி மூர்ச்சை ஆக்கி
ஏதோ தூவும் மாய நொடி
உன் காதின் ஓரம் நீயும் தீண்ட
நாடே ஏங்கி தாவுதடிஈ