Thoduvanandhaa

Thoduvanandhaa Song Lyrics In English


பாடகர்  : நகுல் அபியங்கார்

டம் டகா டம் டகா டம் டகா டம் (4)

தொடுவானந்தா கொடசாயுதே ஒரு நேசந்தான் கைய கோத்திடுதே ஓ ஹோ ஹோ தூரமா ஓ ஹோ ஹோ போகலாம் ஓ ஹோ ஹோ மேகமா ஓ ஹோ ஹோ மாறலாம்

இனி மனம் போலே டமக்கு டமக்கு இனி மனம் போலே டமக்கு டமக்கு இந்த மண் மேலே டமக்கு டமக்கு இந்த மண்மேலே

நீ உரையாடி விடிய விடிய ஊர் கத பேசு நிறைய நிறைய இந்த ரா முழுசும் நிலவு எரியும் அட உறங்காதே

டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும் டும்(4)

ஓ சக்கர கட்டியா மாறுதே நொடி அக்கறை கட்டுர மனச நீ பிடி நெஞ்சுல மொளைக்குர ஆச காத்துல ஏறி ஊஞ்சல் ஆடுதே

ரெக்கைய கட்டுதே கட்டுதே நொடி மின்னல வெட்டுதே வெட்டுதே விழி மின்மினி வார்த்தைய பேசி இரு உசிர் எங்கோ ஊர்வலம் போயிடுதே அட காதலின் கண்ணுல ரெண்டுமே மாட்டிடுதே

புரியாத உறவாக நீ உசிர்காட்டில் பூக்குற நொடியேனும் விளகாத ஓர் நினைப்பாக மாறுற கரையேற தெரிஞ்சாலும் நான் உனக்குள்ள மூல்குகிறேன்

இந்த காலம் நீளுமா வழிகாட்டி போவுமா அட ஏங்குதே ஏங்குதே பார்வையில் கேக்குதே வாஞ்சையா பூங்குருவி

அடகூண்டை விட்டுத்தான் ஒரு கூடு கட்டுதே அது மெல்லமா மெல்லமா ஆடுதே ஆடுதே இன்னோரு பூமிய காட்டிடுதே


அதில் உரையாடு விடிய விடிய ஊர்கதை பேசு நெறய நெறய இந்த ரா முழுசும் நிலவு எரியும் அட உறங்காதே

டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும் டும்(4)

மருதாணி சிவப்பாக நீ நிறங்கூட்டி போகுற தவமேதும் கொடுக்காத ஓர் வரம்போல சேருற எனக்கேதான் தெரியாம நா உனக்குள்ள வாழுறேன்

இந்த கூத்து இனிக்கிது தன்னத்தானே மறக்குது இது என்னது என்னது யாருக்கு தெரியுமோ யார் செஞ்ச மந்திரமோ

நிஜமாக நிலைக்குமா கனவாகி கலையுமா அந்த ரெண்டுக்கும் மத்தியில் சிக்குதே சொக்குதே சத்தமில்லாம சொக்கிடுதே

இனி மனம் போலே டமக்கு டமக்கு இனி மனம் போலே டமக்கு டமக்கு இந்த மண் மேலே டமக்கு டமக்கு இந்த மண்மேலே

அட உரையாடு விடிய விடிய ஊர் கத பேசு நிறைய நிறைய இந்த ரா முழுசும் நிலவு எரியும் அட உறங்காதே

டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும் டும்(4)