Thoonga Vaikkum |
---|
இசை அமைப்பாளர் : பி ஏ சிதம்பரநாதன்
பாடல் ஆசிரியர் : குமாரதேவன்
தூங்க வைக்கும் இரவெல்லாம் ஏங்க வைக்கும் இரவம்மா நான் வாங்கி வந்த உறவெல்லாம் நான் வாங்கி வந்த உறவெல்லாம் வாட்டுகின்ற உறவம்மா
தூங்க வைக்கும் இரவெல்லாம் ஏங்க வைக்கும் இரவம்மா
நெஞ்சினிலே கொண்ட சுமை நீங்கிவிடும் முன்னாலே நெஞ்சினிலே கொண்ட சுமை நீங்கிவிடும் முன்னாலே வயிற்றிலொரு புதுச் சுமையும் வளருதம்மா இனி இந்தச் சுமை இறங்கி வந்து அம்மா என்றழைக்கையிலே எந்த சுமை வந்திடுமோ அம்மம்மா அம்மா அம்மா
தூங்க வைக்கும் இரவெல்லாம் ஏங்க வைக்கும் இரவம்மா
ஈன்றதுமே வெட்டுகிறார் என்றாலும் வாழைமரம் ஈனாமல் தாய்மைதனை வெறுப்பதில்லையே ஈன்றதுமே வெட்டுகிறார் என்றாலும் வாழைமரம் ஈனாமல் தாய்மைதனை வெறுப்பதில்லையே
முத்தெடுக்கும் நேரத்திலே செத்துவிடும் சிப்பிகூட முத்தைத் தரும் தாய்மைதனை வெறுப்பதில்லையே பெண்மையின் முழுமையே தாய்மைதானென்றாலும் பெருமையாக மகிழ என்னால் முடியவில்லையே அம்மா அம்மா
தூங்க வைக்கும் இரவெல்லாம் ஏங்க வைக்கும் இரவம்மா நான் வாங்கி வந்த உறவெல்லாம் வாட்டுகின்ற உறவம்மா தூங்க வைக்கும் இரவெல்லாம் ஏங்க வைக்கும் இரவம்மா