Urave Urave |
---|
உறவே உறவே உயிரின் உயிரே அழகே அருகே வா கண்ணாளா வா உறவே உறவே உயிரின் உயிரே அழகே அருகே வா கண்ணாளா வா
லாலே லால லால லா லாலே லால லால லா
புத்தனைப் போலே சித்தனைப் போலே இதுவரை வாழ்ந்தேனே கண்மணி உன்னை கண்டது நானே கண்ணன் ஆனேனே
புத்தனைப் போலே சித்தனைப் போலே இதுவரை வாழ்ந்தேனே கண்மணி உன்னை கண்டது நானே கண்ணன் ஆனேனே
லாலே லால லால லா லாலே லால லால லா
அங்கங்கள் எங்கெங்கும் எத்தனை மச்சங்கள் எண்ணுங்கள் என்றேதான் சொல்லுது எண்ணங்கள்
வண்ணத்தின் முத்தங்கள் காதலின் சின்னங்கள் முத்தங்கள் தந்தாலே மாறிடும் வண்ணங்கள்
கண்ணான கண்ணே கல்யாண பொண்ணே தொடாதே முன்னே எல்லாமே பின்னே
உன்னை தீண்டுதே உள்ளம் அணை தாண்டுதே வெள்ளம்
தழுவும் பொழுதே நழுவும் நிலவே அழகே அருகே வா பெண் பூவே வா தழுவும் பொழுதே நழுவும் நிலவே அழகே அருகே வா பெண் பூவே வா
காதலிலே காதல் இல்லை துறவியை போலானேன் மன்னவனைக் கண்டவுடன் மறுபடி ஆளானேன்
கண்ணே நான் நேற்று வரை காவியைக் கண்டேனே கண்மணி நீ வந்தவுடன் காவியம் கண்டேனே
கல்யாண சேதி உன் கண்கள் பேசும் குற்றால தென்றல் இப்போது வீசும்
லாலே லால லால லா
ஊரில் கேட்கும் மேளமே இனி நல்ல காலமே
உறவே உறவே உயிரின் உயிரே அழகே அருகே வா கண்ணாளா வா உறவே உறவே உயிரின் உயிரே அழகே அருகே வா கண்ணாளா வா
புத்தனைப் போலே சித்தனைப் போலே இதுவரை வாழ்ந்தேனே கண்மணி உன்னை கண்டது நானே கண்ணன் ஆனேனே
லாலிலால லால லா லாலி லால லால லா