Saathi Ennum |
---|
சாதி என்னும் கொடுமை இந்த நாட்டை என்று விடுமோ வீதிக்கு வீதி வந்து பேதை உயிர் கொண்டு செல்லுமோ
ஆதியில் இல்லாத சாதியும் பாதியில் வந்ததென்ன தொல்லையே சாதி என்னும் பேயை ஓட்டிடும் சத்தியப் பூசாரி இங்கில்லையே
சாதி என்னும் கொடுமை இந்த நாட்டை என்று விடுமோ வீதிக்கு வீதி வந்து பேதை உயிர் கொண்டு செல்லுமோ
உன்னையும் என்னையும் பெற்றது அன்னை தந்தை சாதி அல்ல உண்ண உறங்கிட காப்பது மண் மகளே சாதி அல்ல
நன்மையும் உண்மையும் நித்தமும் சாகுது சாதியினால் அன்பு பண்பு எனும் நற்குணம் வேகுது சாதியினால்
காற்று என்னும் சாதி தீ என்னும் சாதியை தீண்டாவிடில் நிலம் என்னும் சாதியும் நீர் என்னும் சாதியை தீண்டாவிடில் நீயும் நானும் இல்லை மண்ணில் உயிரும் இல்லை ஞானப் பெண்ணே
சாதி என்னும் கொடுமை இந்த நாட்டை என்று விடுமோ வீதிக்கு வீதி வந்து பேதை உயிர் கொண்டு செல்லுமோ
Saathi Ennum Kodumai
Intha Naattai Endru Vidumo
Veedhikku Veedhi Vanthu
Pethai Uyir Kondu Sellumo
Aadhiyil Illaatha Saathiyum
Paadhiyil Vanthathenna Thollaiyae
Saathi Ennum Peyai Oottidum
Saththiya Poosaari Ingillaiyae
Saathi Ennum Kodumai
Intha Naattai Endru Vidumo
Veedhikku Veedhi Vanthu
Pethai Uyir Kondu Sellumo
Unnaiyum Ennaiyum Pettrathu
Annai Thanthai Saadhi Alla
Unna Urangida Kaappathu
Mann Magalae Saadhi Alla
Nanmaiyum Unmaiyum
Niththamum Saaguthu Saathiyinaal
Anbu Panbu Enum Narkunam
Veguthu Saathiyinaal
Kaatru Ennum Saadhi
Thee Ennum Saadhiyai Theendaavidil
Nilam Ennum Saadhiyum
Neer Ennum Saadhiyai Theendaavidil
Neeyum Naanum Illai
Mannil Uyirum Illai Nyaana Pennae
Saathi Ennum Kodumai
Intha Naattai Endru Vidumo
Veedhikku Veedhi Vanthu
Pethai Uyir Kondu Sellumo