Aararo Paada Vanthene Female

Aararo Paada Vanthene Female Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்

ஆராரோ பாட வந்தேனே
ஆவாரம் பூவின் செந்தேனே
தன்மானம் போனால் மண் மீது சாயும்
பொன்மானின் ஜாதி எந்நாளும் நீயும்
தென்னாட்டின் மன்னன் தானே நான்
தாலாட்டும் கண்ணன் தானே

ஆராரோ பாட வந்தேனே
ஆவாரம் பூவின் செந்தேனே

முந்நூறு நாள் சுமந்து
மூச்சடக்கி ஈன்றெடுத்து
கண்ணாக நான் வளர்த்த தங்க மகனே

முன்னேறும் பாதையிலே
முள்ளை வைக்கும் பூமியிலே
அஞ்சாமல் போர் நடத்து சிங்க மகனே

மானம் உயிரினும் மேலாக
வாழும் தமிழ் மகன் நீயாக
தென்னாடும் போற்ற
உன்னை எந்நாடும் வாழ்த்த
கண்ணா என் சந்தோஷம் உன்னாலேதான்


ஆராரோ பாட வந்தேனே
ஆவாரம் பூவின் செந்தேனே

பொல்லாத செயலைக் கண்டு
பொறுத்தது போதும் என்று
பொங்கி எழும் வேளை உண்டு வா வா மகனே

நல்லோர்க்கு சோதனையும்
நாளுமொரு வேதனையும்
சொல்லாமல் வருவதுண்டு விதிதான் மகனே

நாளை எதிர்வரும் காலங்கள்
யாவும் வசந்தத்தின் கோலங்கள்
அஞ்சாமல் மோது பழி உண்டாகும் போது
கண்ணா என் சந்தோஷம் உன்னாலேதான்

ஆராரோ பாட வந்தேனே
ஆவாரம் பூவின் செந்தேனே
தன்மானம் போனால் மண் மீது சாயும்
பொன்மானின் ஜாதி எந்நாளும் நீயும்
தென்னாட்டின் மன்னன் தானே நான்
தாலாட்டும் கண்ணன் தானே

ஆராரோ பாட வந்தேனே
ஆவாரம் பூவின் செந்தேனே