Adaludan Paadalai Kettu

Adaludan Paadalai Kettu Song Lyrics In English


ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்

ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஹோய்

ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்

ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்

ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஹோய்

ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்

ஆண் & ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்

ஆண் & ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்

கண்ணருகில்
பெண்மை குடியேற
கையருகில் இளமை
தடுமாற தென்னை
இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா
இதமாக ஹோய்

செங்கனியில்
தலைவன் பசியாற
தின்ற இடம் தேனில்
சுவையூற பங்கு பெற
வரவா துணையாக

மன ஊஞ்சலின்
மீது பூமழை தூவிட
உரியவன் நீதானே

ஆண் & ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்


ஆண் & ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்

கள்ளிருக்கும்
மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில்
இடம்போடு

உள்ளிருக்கும்
நினைவில் உறவாடு
உலகையே மறந்து
விளையாடு ஹோய்

விம்மி வரும்
அழகில் நடைபோடு
வந்திருக்கும் மனதை
எடைபோடு வேண்டியதை
பெறலாம் துணிவோடு

உன்பாதையிலே
நான் ஊர்வலம் வருவேன்
புதுமையை நீ பாடு

ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்

ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஹோய்

ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்

ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஹோய்

ஆண் & ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்

ஆண் & ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்