Ammamma Thambi Endru

Ammamma Thambi Endru Song Lyrics In English


அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்

அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தான்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த
உள்ளம் அல்லவோ
அது உனக்காக வாழ்ந்த
உள்ளம் அல்லவோ

அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்

கையில்
வைத்து காத்திருந்தால்
காலடியில் காத்திருக்கும்
நன்றி மிக்க நாய்கள் உள்ள நாடு இது
இதை சொந்தமின்றி பந்தமின்றி
வந்த வழி நினைவுமின்றி
பிள்ளைகளும் பிறந்திருக்கும் வீடு

ராம நாடகத்தில்
மூன்று தம்பிகளின்
உள்ளம் கண்டேனே
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை
நானும் கண்டேனே

அது நாடகமா இது நாடகமா
அது நாடகமா இது நாடகமா
இங்கு நான் காணும் வேஷங்கள்
கொஞ்சம் அல்லவே
நான் இது போன்ற
வேஷத்தில் வந்ததில்லையே

அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்


தங்கை எனும் இளைய கன்று
தாய் வீடு வந்ததென்று
என்னுடைய நாடகத்தில் காட்சி
அவள் கொண்டவனை பிரிந்து வந்து
கோலம் கொண்டு நிற்பதனை
கண்டதற்க்கு இன்னொருவன் சாட்சி

கண்ணில் நீர் பெருக
சீதை நின்ற நிலை
கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர்
தம்பி லட்சுமணன்
நெஞ்சில் எழுகிறது

அது பாசமன்றோ
இது வேஷமன்றோ
அது பாசமன்றோ இது வேஷமன்றோ
அவன் ராஜாதி ராஜனுக்கு
பிள்ளை அல்லவோ
இந்த ராஜபார்ட் ரங்கதுரை
ஏழையால்லவா

அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த
உள்ளம் அல்லவோ

அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்