Anbaale Azhagagum Veedu

Anbaale Azhagagum Veedu Song Lyrics In English


அன்பாலே அழகாகும்
வீடு ஆனந்தம் அதற்குள்ளே
தேடு சொந்தங்கள் கை சேரும்
போது வேறொன்றும்
அதற்கில்லை ஈடு

அன்பாலே அழகாகும்
வீடு ஆனந்தம் அதற்குள்ளே
தேடு சொந்தங்கள் கை சேரும்
போது வேறொன்றும்
அதற்கில்லை ஈடு

வாடகை வீடே என்று
வாடினால் ஏது இன்பம் பூமியே
நமக்கானது ஓஓ சோகமே
வாழ்க்கை என்று சோர்வதால்
ஏது லாபம் யாவுமே
இயல்பானது

மாறாமல் வாழ்வுமில்லை
தேடாமல் ஏதுமில்லை நம்பிக்கை
விதையாகுமே

கலைகின்ற மேகம்
போலே காயங்கள் ஆறிப்போக
மலரட்டும் எதிர்காலமே

அன்பாலே அழகாகும்
வீடு ஆனந்தம் அதற்குள்ளே
தேடு சொந்தங்கள் கை சேரும்
போது வேறொன்றும்
அதற்கில்லை ஈடு


பாசமே கோவில்
என்று வீட்டிலே தீபம்
வைத்தால் கார்த்திகை
தினந்தோறுமே ஆஆ

நேசமே மாலை
என்று நெஞ்சிலே சூடி
கொண்டால் வாசனை
துணையாகுமே ஆ ஆ

கூடினால் கோடி
நன்மை சேருமே கையில்
வந்து வாழ்ந்திடு பிரியாமலே

ஏணியே தேவை
இல்லை ஏறலாம் மேலே
மேலே தோல்விகள்
வெறும் காணலே

ஆண் & அன்பாலே
அழகாகும் வீடு ஆனந்தம்
அதற்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும்
போது வேறொன்றும்
அதற்கில்லை ஈடு