Anbe Nee Ange

Anbe Nee Ange Song Lyrics In English


அன்பே நீ அங்கே
நான் இங்கே வாழ்ந்தால்
இன்பம் காண்பது எங்கே
அன்பேஏ

உந்தன் மங்காத
சிங்கார ரூபம்
உந்தன் மங்காத
சிங்கார ரூபம்

எந்தன் வாழ்வெல்லாம்
ஒளி வீசும் தீபம்
வாழ்வெல்லாம் ஒளி வீசும் தீபம்
இன்று இருள் சூழ என் செய்தேன் பாவம்
இருள் சூழ என் செய்தேன் பாவம்
நானும் அங்கே நீயும் இங்கே
அன்பேஏ

இன்ப கரை நாடும்
இல் வாழ்வின் ஓடம்
துன்ப புயலாலே
அலை மோதி ஆடும்


இந்த நிலை மாறும்
நாள் என்று கூடும்
நிலை மாறும் நாள் என்று கூடும்
என்னும் நினைவாலே கண்ணீரில் வாடும்
நினைவாலே கண்ணீரில் வாடும்
நானும் இங்கே நீயும் அங்கே
அன்பே

நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால்
இன்பம் காண்பது எங்கே
அன்பேஏ