Angum Ingum Engum

Angum Ingum Engum Song Lyrics In English


அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த
ஆண்டவனே நீ வாராய்
ஆண்டவனே நீ வாராய்
அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த
ஆண்டவனே நீ வாராய்
ஆண்டவனே நீ வாராய்

அந்தோ உனது உலகில் நடக்கும்
அலங்கோலம் தன்னைப் பாராய்
அலங்கோலம் தன்னைப் பாராய்

அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த
ஆண்டவனே நீ வாராய்
ஆண்டவனே நீ வாராய்

வஞ்சகப் பேயின் ஆட்டம் கண்டும்
நெஞ்சம் பதறவும் இல்லையோஓ
நெஞ்சம் பதறவும் இல்லையோஓ

அஞ்சும் சத்திய தேவியின் கண்ணீர்
துடைத்திட மனம் வரவில்லையோஓ
சஞ்சல ஜகத்தைப் படைத்த உனக்கு
சஞ்சல ஜகத்தைப் படைத்த உனக்கு
கொஞ்சமும் நாணமே இல்லையோ
கொஞ்சமும் நாணமே இல்லையோ


அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த
ஆண்டவனே நீ வாராய்
ஆண்டவனே நீ வாராய்

உண்மைக்கே திரை போடுது உலகம்
பொய்யே வெளியில் உலாவுது
உண்மைக்கே திரை போடுது உலகம்
பொய்யே வெளியில் உலாவுது

நன்மை அழிய தீமை வளர
சுயநலமே பூமியை ஆளுது
கொடுமை மிகுந்த உலகிதை அழிக்க
கோபமும் வரவே இல்லையோ
கோபமும் வரவே இல்லையோ
கோபமும் வரவே இல்லையோ
கோபமும் வரவே இல்லையோஓ