Annai Ennum Aalayam |
---|
என்னென்னவோ ராகங்கள் எத்தனையோ தாளங்கள் என்னிடத்தில் கேளுங்கள் தாயெனும் கோயிலை பாடுவேன்
அன்னை என்னும் ஆலயம் அன்பில் வந்த காவியம் கண்ணில் நின்ற ஓவியம் நேரில் நான் தாய் முகம் பார்க்கிறேன் நினைவெல்லாம் நீயே நிலைத்த என் தாயே ஆனந்தம் ஆயிரம் ஆரம்பம்
அன்னை என்னும் ஆலயம்
நான் என்னை மறந்தேன் வானெங்கும் பறந்தேன் என் வாழ்க்கை சோலையில் என்றும் உல்லாசம் உற்சாகமே இங்கு நான் பாட தேன் ஓட இனிய கனவில் இதயம் மிதக்குதோ
அன்னை என்னும் ஆலயம் அன்பில் வந்த காவியம் கண்ணில் நின்ற ஓவியம் நேரில் நான் தாய் முகம் பார்க்கிறேன்
அன்னை என்னும் ஆலயம்
நான் சின்னக் குயில்தான் நீ எந்தன் குரல்தான் என் ராக மாளிகை இங்கு நீயின்றி யார் தந்தது இந்த பொன்மாலை நல்வேளை நினைக்க நினைக்க மனதை மயக்குதோ
அன்னை என்னும் ஆலயம் அன்பில் வந்த காவியம் கண்ணில் நின்ற ஓவியம் நேரில் நான் தாய் முகம் பார்க்கிறேன் நினைவெல்லாம் நீயே நிலைத்த என் தாயே ஆனந்தம் ஆயிரம் ஆரம்பம்
லல லால லாலா லல லால லாலா தர ராரா தாரரா