Aramba Kalam |
|---|
ஆரம்பக் காலம்
ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு
ஓஒஓஹோஹோஒ
ஆரம்பக் காலம்
ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு
ஆனப் பின்னாலே
இரு பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு
ஊஉஊஉஊஉ
ஆனப் பின்னாலே
இரு பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு
தேவாமிர்தம் தேனிதழ்கள்
தேவர்கள் இல்லை நான் வந்தேன்
மார்பின் அகலம் குன்றங்கள்
மலர்கள் இல்லை நான் வந்தேன்
மஞ்சள் மேனி தென்றல் பட்டு
அஞ்சக் கண்டு நான் வந்தேன்
மாலைகள் ஏந்து
மங்கலச் சாந்து
மார்பினில் நீந்து என்னை தந்தேன்
ஆரம்பக் காலம்
ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு
ஓஒஓஹோஹோஒ
மந்திர கோவில் வாசலிலே
சந்தனம் பூச நான் வந்தேன்
மல்லிகை பூத்த நெற்றியிலே
குங்குமம் அணிய நான் வந்தேன்
பிள்ளை பாடல் மெல்ல பாடும்
பள்ளி கூடம் நான் தந்தேன்
பெண்ணொரு வானம்
கண்ணொரு மேகம்
வந்தது யோகம் என்னை தந்தேன்
ஆரம்பக் காலம்
ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு
நாடக மேடை திரை இல்லை
நாயகி வந்தாள் கவி பாடி
ஆஅஆஆஆ
நாயகியுடன் துணை இல்லை
நாயகன் வந்தான் துணை தேடி
ஆஅஆஆஆ
மின்னல் ரோஜா பொன்னில் ஊறி
கையில் வந்தது உறவாடி
கண்ணன் ராதா ராமன் சீதா
வந்தார் இங்கே நம்மைத் தேடி
ஆரம்பக் காலம்
ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு
ஆனப் பின்னாலே
இரு பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு
ஊஉஊஉஊஉ
ஆரம்பக் காலம்
ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு
இருவர் : ஆஅஆஅஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஅஆஅ