Arumbey |
|---|
இசை மைப்பாளர் : விஜய் ஆண்டனி
அரும்பே அரும்பே
என்னை கடத்தி போ கரும்பே
அழும்பே தழும்பே
உள்ள கெடத்தி போ குறும்பே
அருகாமையே வெறகாகுதே
உணராமலே உயிர் போகுதே
இதம் ஊறுதே
ஏக்கமும் கூடுதே
குறும்பே குறும்பே
என்ன கடத்தி போ குறும்பே
அழும்பே தழும்பே
உள்ள கெடத்தி போ கரும்பே
பத்தியமா நின்ன வாலிபம்
உன்னை பார்த்து தான் விடுதே
பத்திரமா வெச்ச ஆணவம்
தூளாகி தூவிடுதே
எந்த நேரம் செஞ்ச ஓவியம்
நிழல் கூட கூசிடுதே
ஆஆபத்து விரல் பொட்டை காட்டுக்குள்
பூக் கோலம் பூசிடுதே
கண்ண குளியோடு தான்
என்ன வெத போட்டுட்டா
எட்டு கரையோடு தான்
என்ன அலை போட்டுட்டான்
போதையே
தரும் தேவதை
அந்த வாசம் காட்டி புட்டா
அரும்பே அரும்பே
என்னை கடத்தி போ கரும்பே
அழும்பே தழும்பே
உள்ள கெடத்தி போ குறும்பே
நெத்தி முடி சுத்தும் பாம்ப போல்
என்ன சீண்டி பாக்குதடி
ஆஆசின்ன புள்ள செய்யும்
வீம்ப போல்
கையி தீண்டி பாக்குதடா
குங்குமபூ கொட்டும் மேகமா
பஞ்சி வாகம் தூவுதடி
ஆஆமன்மத தீ பத்தும் பாணத்த
உன் மோகம் ஏவுதடா
ஜென்மம் பல தாண்டி தான்
வந்தேன் தட போடாத
கொஞ்சி உறவாட தான்
ஒரு வல போடாத
பால் நிலா
இந்த ஜோடிய
வந்து வாழ கூப்பிடுதே
அரும்பே அரும்பே
என்னை கடத்தி போ கரும்பே
அழும்பே தழும்பே
உள்ள கெடத்தி போ குறும்பே
அருகாமையே வெறகாகுதே
உணராமலே உயிர் போகுதே
இதம் ஊறுதே
ஏக்கமும் கூடுதே
குறும்பே குறும்பே
என்ன கடத்தி போ குறும்பே
அழும்பே தழும்பே
உள்ள கெடத்தி போ கரும்பே