Athai Magan Muthazhagan

Athai Magan Muthazhagan Song Lyrics In English


அத்தைமகன் முத்தழகன்
அரும்புமீசை கட்டழகன்
அத்தமகன் முத்தழகன்
அரும்புமீசை கட்டழகன்
வந்தானம்மா ஒரு பெண் பார்க்கத்தான்
பூமாலைய நான் போடத்தான்

அத்தைமகன் முத்தழகன்
அரும்புமீசை கட்டழகன்
வந்தானம்மா ஒரு பெண் பார்க்கத்தான்
பூமாலைய நான் போடத்தான்

ஆத்தோரம் அந்திக்கருக்கலில்
அவன் ஆசையாய் ஓடிவந்தான்
ம்யாவ்
பார்த்தாண்டி ஒரு பூனையை
அடி ஆத்தா ஓடிப்புட்டான்

அவன் சூரப்புலிதான் வீரத்திலே
பத்துபேரு இருந்தா பக்கத்திலே
அவன் தாத்தாக்குத் தாத்தாதான்
கட்ட பொம்மன்

அத்தைமகன் முத்தழகன்
அரும்புமீசை கட்டழகன்
வந்தானம்மா ஒரு பெண் பார்க்கத்தான்
பூமாலைய நான் போடத்தான்


தூங்காம நடு ராத்திரியில்
அவன் தூண்டிலில் மீன் பிடிச்சான்
விடிஞ்சாக்க அவன் கூடையில
பல தவக்கள கிடந்ததுவாம்

அட கெண்டை கெளுத்தி
முட்டையிடும்
அது தவக்களையாக
வெளியே வரும் இது
தெரியாத புரியாத அப்பாவிதான்

அத்தைமகன் முத்தழகன்
அரும்புமீசை கட்டழகன்
வந்தானம்மா ஒரு பெண் பார்க்கத்தான்
பூமாலைய நான் போடத்தான்