Ayirathil Naan Oruvan

Ayirathil Naan Oruvan Song Lyrics In English


ஆயிரத்தில் நான்
ஒருவன் நீங்கள் ஆணையிட்டால்
படைத்தலைவன்

நான் நினைத்தால்
நினைத்தது நடக்கும் நடந்த
பின் ஏழையின் பூ முகம்
சிரிக்கும்

நான் அழைத்தால்
மலைகளும் நதியும் கடல்களும்
ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்

இந்த உலகம்
கதவடைத்தால் எட்டி
உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துணிந்து
விட்டால் ஏழைக்கும் மெல்ல
மெல்ல சொர்க்கம் பிறக்கும்

ஆயிரத்தில் நான்
ஒருவன் நீங்கள் ஆணையிட்டால்
படைத்தலைவன்



அரசனாகட்டுமே
அரசியாகட்டுமே குற்றங்கள்
யார் செய்தாலும் தட்டிக் கேட்டு
தடுப்பேன் தர்மத்தின் பக்கம்
இருப்பேன்

நெற்றியின்
வேர்வை துளி நிலத்தில்
வீழ்வதற்குள் உழைத்த
மக்களுக்கு கூலி வாங்கிக்
கொடுப்பேன் உண்மைக்கு
காவல் இருப்பேன்

இந்த உலகம்
கதவடைத்தால் எட்டி
உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துணிந்து
விட்டால் ஏழைக்கும் மெல்ல
மெல்ல சொர்க்கம் பிறக்கும்

ஆயிரத்தில் நான்
ஒருவன் நீங்கள் ஆணையிட்டால்
படைத்தலைவன்




புரட்சி மலரட்டுமே
புன்னகை தவழட்டுமே
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
ஒவ்வொரு சூரியன்
சொந்தத்தில் ஜொலிக்கட்டுமே

வாழ்க்கை விடியட்டுமே
வறுமை ஒழியட்டுமே
உழைக்கும் மக்களுக்கு
உலகங்கள் சொந்தம்
உண்மைகள் தெளியட்டுமே

இனி எழுஞாயிறு
எழுக இந்த இருள் கூட்டங்கள்
ஒழிக பழைய பகை படையெடுத்தால்
கத்தி புத்தி ரெண்டும் கொண்டு
வென்றுவிடுக

ஆயிரத்தில் நான்
ஒருவன் நீங்கள் ஆணையிட்டால்
படைத்தலைவன்

நான் நினைத்தால்
நினைத்தது நடக்கும் நடந்த
பின் ஏழையின் பூ முகம்
சிரிக்கும்

நான் அழைத்தால்
மலைகளும் நதியும் கடல்களும்
ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்

இந்த உலகம்
கதவடைத்தால் எட்டி
உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துணிந்து
விட்டால் ஏழைக்கும் மெல்ல
மெல்ல சொர்க்கம் பிறக்கும்