Chinna Kuyil Oru |
|---|
சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது
தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது
சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது
தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது
என்ன செய்யும் இந்தக்
குயில் கண்ணம்மா
பாவமடி சின்னக் குயில் அம்மம்மா
சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது
தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது
அன்னைக் குயில் தன்னை இந்த
பிள்ளைக் குயில் பார்க்கலே
பிள்ளைக் குயில் ஏக்கம் தன்னை
தந்தைக் குயில் தீர்க்கலே
சின்னக்குயில் தாயின் அன்பை
தினம் தினம் காணாமே
உள்ளத்திலே வாட்டம் கொண்டு
உருகுது தூங்காமே
தந்தை உள்ளம்
எப்போதும் பூமியிலேஏ
பொங்கி வரும்
தாய் உள்ளம் ஆகாதே
எந்தத் துணை
ஆனாலும் வாழ்க்கையிலே
சொந்தத் துணை
தாய் போல கிடையாதே
தாயைப் போல பேசும்
தெய்வம் ஏதும் இல்லே
சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது
தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது
பிள்ளைக்குயில்
வாழும் கூட்டில்
பெத்தக்குயில் வாழ்ந்தது
பெத்தக்குயில் கூட்டை விட்டு
காட்டுப் பக்கம் பறந்தது
அன்னைக்குயில்
கூட்டில் வேறோர்
ஆசைக்குயில் வந்தது
தந்தைக்குயில் உள்ளம் நோக
சண்டை இட்டுப் போனது
ஆதரவு இல்லாத
சிறு குயிலும்ம்ம்
வாடுதம்மா நீர் இல்லா
வயல் போல
தாயின் மடி காணாத
பிள்ளைக் குயில்
சிந்துதம்மா கண்ணீரை நதி போல
ஏக்கம் தீரும்
நாளும் என்றுதான் வருமோ
சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது
தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது
என்ன செய்யும் இந்தக்
குயில் கண்ணம்மா
பாவமடி சின்னக்குயில் அம்மம்மா
சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது
தன் அம்மா குயில் எங்கேன்னு தேடுது