Enadhu Thittangal Vetri

Enadhu Thittangal Vetri Song Lyrics In English

எனது திட்டங்கள் வெற்றிப் படிகளில் ஏறும்
மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்
எனது திட்டங்கள் வெற்றிப் படிகளில் ஏறும்
மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்
விழிகள் நித்தம் சுழலும் சுத்தும்
வழிகள் மொத்தம் தகிட தத்தம்
இளைய ரத்தம் எனது சித்தம் புதுமை தான்

எனது திட்டங்கள் வெற்றிப் படிகளில் ஏறும்
மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்

வருது வருது வசந்தம் வருது
தினசரி நமக்காக
நெருங்கு நெருங்கு மயங்கு மயங்கு
நுனி விரல் படத்தான்

உனக்கும் எனக்கும் தெரியும் புரியும்
விஷயத்தை மறைத்தேனே
எதையும் அறியும் இறைவன் ஒருவன்
அவனையும் ஜெயித்தேன்

உனது வேலை அசுர வேலை
ஒதுங்கும் போது ஒதுங்குது
பதுங்கும் போது பதுங்குது
எனக்கில்லை உனக்கில்லை அச்சம்தான் யா

எனது திட்டங்கள் வெற்றிப் படிகளில் ஏறும்
மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்
விழிகள் நித்தம் சுழலும் சுத்தும்
வழிகள் மொத்தம் தகிட தத்தம்
இளைய ரத்தம் எனது சித்தம் புதுமை தான்

எனது திட்டங்கள் வெற்றிப் படிகளில் ஏறும்
மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்

இதையும் அதையும் எதையும்
இதயம் தவறென நினைக்காது
இவனும் அவனும் எவனும் வரட்டும்
துணிவுடன் எதிர்ப்பேன்

நெளிவு சுளிவு அனைத்தும் அறிந்து
நடப்பதில் படு சூரன்
இளைய கிளியை வசிய மொழியில்
மயக்கிடும் அதி தீரன்

புவியின் மீது கவலை ஏது
இனிமையானப் பொழுது தான்
இசைகள் பாடும் மனது தான்
பிறக்கட்டும் சுரக்கட்டும் இன்பம்தான் ஹே

எனது திட்டங்கள் வெற்றிப் படிகளில் ஏறும்
மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்
விழிகள் நித்தம் ஹா
சுழலும் சுத்தும் ஹேய்
வழிகள் மொத்தம் ஹாஹா
தகிட தத்தம்
இளைய ரத்தம் எனது சித்தம் புதுமை தான்

எனது திட்டங்கள் வெற்றிப் படிகளில் ஏறும்
மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்
எனது திட்டங்கள் வெற்றிப் படிகளில் ஏறும்
மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்