Ennil Vazhum Jeevane |
---|
ஆஆஆஆஆஆஆஆ
என்னில் வாழும் ஜீவனே ஹோய் இன்பம் என்னும் ராகமே ஒரு வானக சொர்க்கம் காலடியோரம் வந்ததை நான் பார்த்தேன்
நீ கொஞ்சிடும் நேரம் அஞ்சுகம் பேசும் செந்தமிழ் நான் கேட்டேன்
என்னில் வாழும் ஜீவனே ஹோய் இன்பம் என்னும் ராகமே
கண்மணி உந்தன் காலடியோசை அதுதான் எனக்கு சுக ராகம் காதலன் நாளும் கண்களில் பேசும் மொழிதான் எனக்கு புது வேதம்
கைகளில் தாவி கார்க்குழல் நீவி கைகளில் தாவி கார்க்குழல் நீவி அணைக்கும் அணைப்பில் பசியாறும்ஹோய்
என்னில் வாழும் ஜீவனே ஹோய் இன்பம் என்னும் ராகமே
பாரதிதாசன் பார்வையில் தோன்றும் அழகின் சிரிப்பே நீதானா அப்படியானால் நானுன்னை கேட்பேன் தமிழின் இயக்கம் நீதானா
கட்டிலில் நாளும் கவி அரங்கேறும் கட்டிலில் நாளும் கவி அரங்கேறும் இளமை நினைவே நலந்தானா ஹோய்
என்னில் வாழும் ஜீவனே ஹோய் இன்பம் என்னும் ராகமே ஒரு வானக சொர்க்கம் காலடியோரம் வந்ததை நான் பார்த்தேன்
நீ கொஞ்சிடும் நேரம் அஞ்சுகம் பேசும் செந்தமிழ் நான் கேட்டேன்
இருவர் : என்னில் வாழும் ஜீவனே ஹோய் இன்பம் என்னும் ராகமே