Iranthavanai Sumanthavanum |
|---|
இறந்தவன சொமந்தவனும் இறந்திட்டான்
அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
இறந்தவன சொமந்தவனும் இறந்திட்டான்
அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி
பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி
பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி
இறந்தவன அப்படி இறந்தவன சொமந்தவனும் இறந்திட்டான்
அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
தாயாரின் வேதனையில் பிறக்குறான்
மனுஷன் தன்னாலே துடிதுடிச்சு இறக்குறான்
தாயாரின் வேதனையில் பிறக்குறான்
மனுஷன் தன்னாலே துடிதுடிச்சு இறக்குறான்
இடையில் ஓயாத கவலையிலே மிதக்கிறான்’
இடையில் ஓயாத கவலையிலே மிதக்கிறான்
ஒரு நாள் உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான்
ஒரு நாள் உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான்
அப்படி இறந்தவன சொமந்தவனும் இறந்திட்டான்
அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
இளமையிலே சில நாள் முதுமையிலே சில நாள்
இளமையிலே சில நாள் முதுமையிலே சில நாள்
இன்பத்திலே சில நாள் துன்பத்திலே சில நாள்
அன்னையும் மனைவியும் அருமைப் பிள்ளையும்
அன்னையும் மனைவியும் அருமைப் பிள்ளையும்
கண்ணீர் சிந்திடவே கடைசி வழி ஒரு நாள்
கடைசி வழி ஒரு நாள்
அப்படி இறந்தவன சொமந்தவனும் இறந்திட்டான்
அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்