Kadhaliye Kadhaliye |
|---|
இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
காதலியே காதலியே
நீ எனக்கு கடவுள் தானே
கண்மணியே நீ போனால்
அது எனக்கு மரணம் தானே
நீ ஒரு வார்த்தை சொன்னால் போதும்
எனக்குள் ஏதோ பலம் கூடும்
நீ ஒரு பார்வை பார்த்தால் போதும்
மலையும் உடைந்து தவிடாகும்
இந்த காதல் இல்லை என்றால்
இந்த பூமி சக்கரம் சுழலாது
இந்த காதல் இல்லை என்றால்
இந்த பூமி சக்கரம் சுழலாது
காதலியே காதலியே
நீ எனக்கு கடவுள் தானே
கண்மணியே நீ போனால்
அது எனக்கு மரணம் தானே
என் இன்பத்திலும் துன்பத்திலும்
இடி மழை மின்னலிலும்
நீதான் என் உயிரே என் உயிரே
என் எண்ணத்திலும் செயலிலும்
எட்டு திக்கு திசையிலும்
நீதான் என் உயிரே என் உயிரே
காதல் உடன் பயணம் போனால்
வழி துணைகள் தேவை இல்லை
காதலிலே காயம் கண்டால்
என்றும் அது வலிப்பதில்லை
காதல் துணிந்த பின்
துயரங்கள் பார்ப்பதில்லை
கடல் மீனுக்கு புயல் ஒன்றும்
பெரிது இல்லை
இந்த காதல் தலை நிமிர்ந்தால்
அந்த வானம் உயரம் கிடையாது
இந்த காதல் இல்லை என்றால்
இந்த பூமி சக்கரம் சுழலாது
காதலியே காதலியே
நீ எனக்கு கடவுள் தானே
காதலியே
என் கனவிலும் நினைவிலும்
உடலிலும் உயிரிலும்
கலந்தாய் என் உயிரே என் உயிரே
என் இரவிலும் பகலிலும்
இதயத்தின் துடிப்பிலும்
தொடர்ந்தாய் என் உயிரே என் உயிரே
காதலர்கள் அழிந்தால் கூட
காதல் என்றும் அழியாது
கடலின் அலை ஓய்ந்தால் கூட
காதல் அலை ஓயாது
அடி காதலின் வலிமைகள்
புரிவதில்லை
அதன் கால் தடம் நெருப்பினை
அறிவதில்லை
இந்த காதல் ஒன்று தானே
அட ஜனனம் மரணம் கிடையாது
இந்த காதல் இல்லை என்றால்
இந்த பூமி சக்கரம் சுழலாது
காதலியே காதலியே